தூக்கம்
தூங்காமை வேண்டுமென்கிறார் வள்ளுவர்। 'விழித்திரு என்கிறார் வள்ளலார்। தூங்காமலிருப்பது சாத்தியமா? தூக்கம் குறித்து எங்கள்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்களேன்....?
வள்ளுவரும் வள்ளலாரும் சொன்னது அகவிழிப்பு.
எறும்புகள் தூங்குவதில்லை. மனிதர்கள் தூங்காமலிருக்க முடிவதில்லை; தூக்கத்தின்போதுதான் 'அட்ரினோ கார்ட்டி கார்ட்ரோபின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது. அது உடலையும் மனதையும் சமநிலைபடுத்துகிறது.
ஆண்களைவிடப் பெண்களுக்கு ஒரு மணிநேரத் தூக்கம் அதிகம் தேவையென்று சற்றுமுன் கிடைத்த விஞ்ஞானத் தகவல் கூறுகிறது. எட்டுமணிநேரம் தொடர்ந்து தூங்காமல் இரண்டு நான்கு மணி நேரங்களாகப் பகிர்ந்து தூங்குதல் கூடுதல் பயனளிக்கும் என்கிறது அண்மை ஆராய்ச்சி.
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தூக்கத்தில் நிறைய வேறுபாடு இருக்கிறது. பூனை பதெனெட்டு மணி நேரம் தூங்குகிறது. கோலா கரடி இருபத்திரண்டு மணி நேரம் தூங்குகிறது. நத்தை மூன்று வருடம் தூங்குகிறது. இருபது நிமிடம் மட்டுமே தூங்குகிறது ஒட்டகச்சிவிங்கி. டால்பின் ஒரு கண்ணால் மட்டுமே தூங்குகிறது. வானில் பறக்கும் பறவைகள் பறக்கும்போதே தூங்கிக்கொள்கின்றன. ஆனால் ஒரு தூக்கத்தின் நீளம் ஒன்பது நொடிகள் தாம்; நூற்றுக்கணக்கான ஒன்பது நொடிகள் தூங்கிக் கொண்டே பறக்கின்றன.
தூக்கத்தின்போது எட்டில் ஒரு மனிதன் குறட்டை விடுகிறான். பத்தில் ஒரு மனிதன் பல்லைக் கடிக்கிறான். அதிகபட்சமாய் ஒரு மனிதன் பதினெட்டு நாட்கள் இருபத்தொரு மணிநேரம் தூங்காமல் இருந்திருக்கிறான். அதன்பிறகு அவனை சோதித்தால் சித்தப்பிரமை - பார்வைக்குறைவு - நாக்குழறுதல் நினைவிழப்பு நேர்ந்திருக்கிறது.
எனக்கு தெரிந்து கவிஞர் முத்துலிங்கம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகள் தூங்காமலிருக்கிறார். எத்தனை முயன்றும் தூக்கம் வரவில்லை; ஆனால் பெரிய பக்க விளைவுகள் ஏதும் அவருக்கு நேரவில்லை என்பது ஆறுதலான - ஆச்சரியமான செய்தி.
படுக்கையில் சாய்ந்தவுடன் எவ்வளவு நேரத்தில் தூக்கத்துக்குள் நுழைகிறீர்கள் என்று கவனித்துப் பாருங்கள். ஏழு முதல் பன்னிரண்டு நிமிடங்களுக்குள் தூங்கிவிட்டால் உடம்பும் மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம்; இல்லையேல் வாழ்க்கை முறை மாற்றுவது உத்தமம்.
Wednesday, January 30, 2008
Tuesday, January 29, 2008
நண்பர்கள்
ஆணந்தகுமார்: என் தந்தையின் மகன், என்னைவிட இரண்டு வயது மூத்தவன் ஆனால் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவன். அதிகமாக பேசுபவன் அனைவரும் தன்னை பாராட்டவேண்டும் என்று இளம் வயதிலேயே எதிர்பார்த்து அதற்கு ஏற்றார்போல் செயல்களை செய்பவன். பெரும்பாலும் வகுப்பில் முதல் மதிப்பென் எடுப்பவன். இவனை ஏன் அனைவரும் ஒரு மரியாதைக்குரியவனாக பார்க்கிறார்கள் என்று மிக இளம் வயதில் பொறாமை பட்டுக்கொண்டது உண்டு. இவன் தன் வாய் திறமையாலேயே அனைவரையும் கவர்ந்துவிடுகிறான் என்பதை புரிந்துகொண்டேன். இவன் அப்போது அனைவருக்கும் நல்லவனாக நடித்தானா அல்லது உண்மையாகவே நல்லவனாக இருந்தானா என்பது அப்போது தெரியவில்லை. பெரும்பாலும் அவன் மீது நான் கொண்ட பொறாமையே அதிகமாக இருந்தது அதனால் அவனை எப்படி எதிலாவது மாட்டிவிடவேண்டும் என்று சமயம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை எங்கள் பள்ளி தாளாளர் நோய்வாய்பட்டிருக்க இவன் அவருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என அனைவரிடமும் காசு வசூல் செய்தான். அப்போது அதற்காக வகுப்பு முன் அடிக்கடி வந்து நின்று நம் தாளாளர் குணமடைய கடவுளுக்கு காணிக்கை செலுத்தி கடவுளை வேண்ட வேண்டும் அதற்காக அவரவரால் முடிந்ததை கொடுங்கள் என்று தினமும் கூறிக்கொண்டிருந்தான் தான் ஒரு முன்னுதாரணமாக 1 ரூபாயை கொடுப்பதாக அறிவித்தான். அப்போது நாங்கள் 1985 2ம் வகுப்பு
படித்துக்கொண்டிருந்தோம். அவ்வப்போது இவன் இப்படி பேச ஒவ்வொருவராக 5 பைசா, 10 பைசா என கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் எதுவும் கொடுக்கவில்லை, சில நாட்களில் யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் யார் யார் எதுவும் கொடுக்கவில்லை என வாசிக்க தொடங்கினான். அதுமட்டுமல்லாமல் தனது முயற்சியை பற்றி வகுப்பாசிரியை மற்றும் மற்ற பாட ஆசிரியைகளை சொல்லி அவர்களும் இவனை வகுப்பறையில் வெகுவாக மெச்ச ஆரம்பித்தார்கள். எனக்கு தாளாளரோ வயதானவர் அவருக்கு சில நேரம் உடல்நிலை இயலாமல் போவது இயற்கையான நிகழ்வு, இவன் எதற்காக காசு வசூலிக்கிறான் என்று ஒரே கேள்வியாக அதோடு என் தாயார் பேருந்து கட்டணத்தை 20 காசை ஒரு அறைக்கால் சட்டை பையிலும் இன்னொரு 20 காசை மற்றொரு பையிலும் வைத்து இந்த பாக்கெட்ல இருக்குறத காலையில குடுக்கனும், இந்த பையில இருக்குறத சாயந்தரம் கொடுக்கனும் என சொல்லியனுப்புவார்கள். பள்ளியில் அமரும்போது பாக்கெட்டிலிருக்கும் காசு நழுவிவிடக்கூடாது என பாக்கெட்டையே பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த காலமுண்டு. இந்த நிலையில் இவன் காசுள்ள ஒருவரின் உடல்நிலை முன்னேற கட்வுளுக்கு காணிக்கை கொடுக்க காசு கேட்டால் என்ன செய்வது? ஒருநாள் காலை பேருந்திற்கு போனது போக மீந்த காசை இவனிடம் கொடுத்துவிட்டேன். வீட்டில் என் அம்மாவிடம் இதை சொல்ல என்ன ஏது என விவரமாக கேட்டார்கள். நான் எல்லா கதையையும் சொல்ல இது ஆணந்தின் அம்மாவிடம் விசாரிக்கப்பட அவன் அம்மாவோ உனக்கு எதற்கு இந்த வேலை என வெளுத்துவிட்டார்கள். பாவம் நான் போட்டுக்கொடுத்ததால் இவனுக்கு அடிவிழுந்தது எனக்கு தெரியாது. இரண்டு நாட்கள் கழித்து இவன் என்னிடம் உண்மையை சொல்ல எனக்கு சற்று வருத்தமாகிவிட்டது.
கல்லூரியில் படிக்கும் போது அவன் திருச்சியிலிருந்து வரும்போது வீட்டிற்கு வந்து அரட்டை அடிப்பான். தற்போது ஆணந்து திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறது ஆனால் அதிகம் சந்திக்க வாய்ப்பு இல்லாமல் எப்போதாவது சந்திப்பது உண்டு. ஆணந்து கல்லூரி படிப்பில் கோட்டைவிட அவன் பெற்றோருக்கு என்னிடம் பேசுவதற்கு கூட சற்று கூச்சம்.
கௌரி சங்கர்: என் தந்தை, ஆணந்தின் தந்தை, கௌரி சங்கரின் தந்தை மூவரும் ஒரே நிறுவணத்தில் பணிபுரிபவர்கள், கிட்டதட்ட ஒரே வயதுடையவர்கள், ஓரளவு நிலங்கள் உள்ளவர்கள். ஆனால் கௌரியின் தந்தை பலமுறை கோட்டைவிட்டு தொலைதூர கல்விமுறையில் பி.காம் படித்தவர். ஆணந்தின் தந்தை பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர். என் தந்தையோ பள்ளிக்கே போனதில்லை. மூன்று பேரும் ஒரே வகுப்புநிலையில் படித்தாலும் நான் வயதில் இளையவன். மூன்று பேரின் தந்தைமார்களிடமும் மகன்களை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்பதில் ஒருவித போட்டியிருந்தது. எனது பத்தாம் வகுப்பு மற்றவர்களைவிட குறைவாக போக என் தந்தைக்கோ இது அவமாணம் என்ற எண்ணம். பின்னர் நான் பன்னிரண்டாம் வகுப்பில் அதிகமான மதிப்பென் வாங்கிவிட மற்றவர்கள் அவமாணமாக உணர்ந்தனர். இதில் கௌரி சங்கரின் தந்தையும் மகனும் குள்ளநரிகள், புள்ளுருவிகள், காலணியை நக்கியேனும் காரியத்தை சாதித்துக்கொள்பவர்கள். வாழ்வில் தாங்கள் முன்னுக்கு வர யாரையும் எந்த வகையிலேனும் வீழ்த்திவிட நினைப்பவர்கள். தன் சுயநலத்திற்காக ஒரு சங்கத்தில் உறுப்பினராகி அந்த தொழிற்சாலையின் ஒரு பெரிய போராட்டத்திற்காக சில கைகூலிகளை திரட்டி போராட்டத்தையே பிசுபிசுக்க செய்த கம்யூனிச தொழிற்சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர் ஆனால் பொதுவுடமை என்றால் ஏதும் தெரியாது.
நடராஜன் - மாணிக்கம்: வேளாளர் இனத்தை சேர்ந்த பையன்கள் 5 ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நாங்கள் மூவரும் கிட்டதட்ட முன்பின் ராங்க் வாங்கும் மாணவர்கள். இவர்கள் இருவரும் காண்வெண்டிலேயே செருப்புகூட அணியாமல் டை கட்டிவந்த மாணவர்கள். பிரச்சனை அதுவல்ல ஆனால் அவர்களின் குணம் தங்கள் ரப்பரை வெட்டி என்னிடம் கொடுத்துவிட்டு நான் உடைத்துவிட்டதாக என்னை ஏமாற்றி காசு வாங்கி என் எதிரேலேயே தேன் மிட்டாய் வாங்கி தின்றது. நான் காசை கொடுத்துவிட்டு நடந்து வீட்டிற்கு போக நேரம் கழித்து வந்ததை பார்த்து விசாரித்து பின் பள்ளியில் வந்து விசாரித்து ஒருவழியாக நான் ஏமற்ற சதியிலிருந்து மீண்டது. என் வரலாறு புத்தகத்தை அடாவடியாக கிழித்துவிட்டு ஆசிரியையிடம் சொல்லக்கூடாது என மிரட்டியது. சொல்லப்போனால் பள்ளிப்பருவத்தில் அது ஒரு மன உளைச்சல். ஆனால் அவர்கள் அதற்கு பிறகு படித்ததாகவும் தெரியவில்லை, என் கண்ணில் படவில்லை, ஒருவேளை குடும்ப ஏழ்மையால் படிப்பைவிட்டிருக்கலாம்.
ஜெயக்குமார்: சிவந்த நிறம், சிறிய தலை, குள்ளநரித்தனம், தான் ஒரு பெரிய கராத்தே வீரன் என்ற நினைப்பு, படிப்பில் பூஜ்ஜியம் என்றே சொல்லலாம், மஞ்சள் பை, 13ம் நம்பர் ஆண்டிகரை பேருந்து தான் இவனது வாகணம். இவனது தந்தையும் தொழிற்சாலையில் பணிபுரிபவர் தான். ஜெயக்குமார் 9 ம் வகுப்பு படிக்க, இவன் தம்பி 10 ம் படித்துக்கொண்டிருந்தான் எங்கள் வகுப்பில் அப்போது பெரிய மாணவன் இவன் தான். இவன் வகுப்பில் ஆசிரியர் வராத நேரத்தில் பெஞ்சில் அமர்ந்தபடியே கரத்தே வித்தை காட்டிக்கொண்டிருப்பான். அதை வேடிக்கை பார்க்கும் என்னை தன் சிஷ்யன் என்று கூறுவான், பரிட்சை நேரத்தில் என் அருகில் அமர்ந்து பேப்பரை காட்டச்சொல்லி நச்சரிப்பான். அசோக் என்ற எங்கள் நண்பன் ஒருவனை தன் காதலி என்று கூறி அடிக்கடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டிருப்பான். ஒருமுறை இந்த அசோக் சிறுநீர் கழித்துவிட்டு ஜிப்பை போடும்போது ஆணுறுப்பு ஜிப்பில் மாட்டிக்கொண்டு தோல் கிழிந்து இரத்தம் வர அவன் வயதுக்கு வந்துவிட்டதாக கூறி அன்றிலிருந்து இருவரும் காதலர்களாகிவிட்டார்கள். அவ்வப்போது இவர்கள் வகுப்பு நடக்கும் போதே சில்மிஷம் செய்துகொண்டிருப்பார்கள். இந்த கராத்தே வீரனை 12ம் வகுப்பு படிக்கும்போது மூண்றாம் மாடியில் வந்து ஒருவன் அடித்து கீழே தள்ளி உதைக்க இவனது இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது. பின்னர் 12 ம் வகுப்பு தோல்வி, டிப்ளமோ என போய் தற்போது சொந்த ஊரிலேயே ஏதோ தொழில் செய்துகொண்டிருக்கிறான்.
விஜயகுமார்: உயரமான அய்யர் வீட்டுப்பையன். கணித பாடத்தில் கெட்டிக்காரன். பள்ளிக்கு இருவரும் சேர்ந்து போவது வழக்கம், சில சமயம் சேர்ந்து படிப்பது, கிரிக்கெட் விளையாடுவது என போய்கொண்டிருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது இவன் ஒரு பெண்ணை காதலித்து சுற்றிக்கொண்டிருக்க அதுகுறித்து நான் ஏதோ விமர்சிக்க இருவருக்கும் ஏற்பட்ட விவாதம் கைகலப்பாகி அவனை எங்கள் வகுப்பு சக மாணவிகள் முன்பு உதைத்துவிட்டதால் அவமானப்பட்டு என்னை நாற்காலியின் இரும்பு கைபிடியால் தாக்கிவிட்டு ஓட பார்க்க நான் அவனை பாய்ந்து பிடிக்கபோக கம்பியூட்டர் அறை அமர்களமாகி எங்கள் தேவதையான கம்பியூட்டர் டீச்சர் என் மண்டையை தடவி பார்த்துவிட்டு அவனை எச்சரித்தார். ஆக இப்போதும் அந்த டீச்சர் தொட்ட குளுமை இருக்கிறதே அட அட, ஒருமுறை டீச்சர் என்னை மூஞ்சப்பாரு என திட்ட, ஏன் மிஸ் என் மூஞ்சிக்கு என்ன குறைச்சல் என கேட்க வகுப்பில் ஒரே நிசப்தம்.
ரஞ்சித்: மதுரைக்காரன், அய்யர் பெரியம்மா வீட்டில் தங்கி படித்தான். படிப்பில் நல்ல கெட்டிக்காரன் ஆனால் நன்றாக உளறுவான். அவன் பெரியம்மாவின் மகள் வயதுக்கு வந்த விசயத்தை வகுப்பு தோழர்களிடம் சொல்ல, அவர்கள் அவனிடம் விளாவாரியாக கேட்க, அவனும் படுக்கையெல்லாம் இரத்தமாக இருந்தது அது இது என ஏதோ சொல்லிவைக்க, பின்னர் பையன்கள் இவனை அதை வைத்தே மிரட்ட ஆரம்பித்துவிட்டனர். அதனால் இவன் தினமொரு டார்ச்சரை சந்திக்க வேண்டியதாகிவிட்டது.
பள்ளிப்பருவம் முடியும் வரை எனக்கு வீட்டு வேலையே அதிகமாக இருந்ததால் நட்பு வட்டம் என்பது மிகவும் சிறியதே. பின்னர் கல்லூரி வந்த பின்பே சிலருடன் பழக ஆரம்பித்தேன்....
ரமேஷ்: சிவந்த கட்டுப்பெட்டியான அய்யர் வீட்டுப்பையன் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் கல்லூரிக்கு பயணிக்கும் வழியில் 10 கி.மீ பிறகு எங்களுடன் பேருந்தில் சேர்ந்துகொள்பவன். கொஞ்சம் விவஸ்த்தையில்லாத நச்சரிப்பான இடம் பொருள் ஏவல் தெரியாதவன். இடஒதுக்கீட்டிற்கு எதிராக காரசாரமாக விவாதிப்பவன். ஆனால் அவர்கள் வீட்டில் என்னை அந்நியமாக நடத்தவில்லை. இவன் தந்தையிடம் அய்யருக்கான ஒரு கெடுபிடியிருந்தாலும் மேட்டூர் தெர்மலில் உதவி மேலாளராக இருந்ததால் எனக்கு பல விண்ணப்பங்களில் முகம் சுளிக்காமல் பொறுமையாக கையொப்பம் இட்டு வாழ்த்தியிருக்கிறார். இந்த ரமேஷ்தான் "A" படத்திற்கு போய்விட்டு அங்கு கல்லூரி மற்றும் படிப்பு விவரங்களை அருகிலிருந்தவனிடம் சொல்லிக்கொண்டிருந்தவன்.
சரவணன்: கல்லூரிக்கு பயணிக்கும் வழியில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் பயணித்தவுடன் எங்களுடன் பேருந்தில் சேர்ந்துகொள்ளும் வேளாளர் இனத்தை சேர்ந்தவன். பொது விவரங்களும் அலுவல் செய்திகளும் சற்று அறிந்து வைத்திருப்பவன். இவன் மாமா வழக்குரைஞர் என்பதால் இவனுக்கு சற்று விவரங்கள் தெரியும். தற்போதும் சந்தித்துக்கொள்ளும், சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ளும் நல்ல நண்பன். சற்று பயணித்து இயற்கையை ரசிக்கவேண்டும் என தோண்றினால் இவர்களின் தோட்டத்திற்கு போவது வழக்கம்.
மயில்வாகணன்: எனக்கு சூப்பர் சீணியர், ஆனால் பெயர் சொல்லி அழைப்பதுதான் வழக்கம். அதிமுக பிரமுகரின் மகன். ஆனால் இவனுக்கு அரசியல் பிடிக்காது. இளம் வயதிலேயே தனக்கென ஒரு லட்சியமும், நேர்மையான வாழ்க்கைமுறையும் கொண்டவன். எதற்காகவும் எளிதில் அலட்டிக்கொள்ளாத ஒரு ஜீவன். கிரிக்கெட் பைத்தியம், வீட்டில் ஒரே பையன், பி.எஸ்.ஜியில் மேற்படிப்பு படித்தவன் தற்போது திருநெல்வேலியில் டி.எஸ்.பியாக பணியாற்றிக்கொண்டிருக்கிறான். நமக்கும் காவல்துறைக்கும் 7ம் பொருத்தம் ஆனால் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனாலும் நண்பர்கள் மூலம் விவரங்களை அறிந்துகொண்டிருக்கிறோம்.
அருளாணந்தம் - முருகாணந்தம்: இருவரும் அண்ணன் தம்பி போல் இருப்பார்கள் ஆனால் அண்ணன் தம்பியர் அல்ல. எனது கல்லூரி மற்றும் பல்கலைகழக ஜீனியர்கள். பல்கலைகழகத்திற்கு வந்த பின்பு என்னுடன் எப்போதும் இருபுறமும் மெய்காப்பாளார்கள்போல் இருபுறமும் வலம் வந்த சிஷ்யண்கள். தற்போது இருவரும் பெங்களூரில் தான் இருக்கிறார்கள், இருவருக்குமே திருமணமாகிவிட்டது.
செந்தில்குமார்: பட்ட மேற்படிப்பில் ஆதிக்கபோக்காக திரிந்தாலும் தற்போது பலவகையில் மாறியிருக்கிறான்। தற்போது ஹைத்ராபாத்தில் இருக்கிறான். சிலநாள் எந்த தகவலும் இல்லாமல் போனால் யாகூ மெசென்ஞரில் ஆப்-லைன் மெசெஜ் அனுப்பிவிடுவான். மிகவும் கச்சிதமான உழைப்பாளி குடும்பத்தில் பிறந்தவன். வீட்டிற்கும் பெற்றோருக்கும் அடக்கமான பையன். அதிக விளம்பரம் தேட கொஞ்சம் ஹை பிச்சில் பேசுவது இவன் வழக்கம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் அறிமுகமான தோழன்.
பாலசந்தர்: என்னை அடிக்கடி தேடிவந்து விவரங்கள் சேகரிக்கும் நண்பன். முன்னேற துடித்தவன், ஆனால் ஒரே பையன் என்பதாலேயே ஒரு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுவிட்டான். ஊருக்கு போனால் என்னை ஏதோ உயரத்தில் இருப்பவனை பார்ப்பதுபோல் பார்க்கும் நல்ல நண்பன்.
முருகாணந்தம்: பட்ட மேற்படிப்பில் அறிமுகமாகி நெருக்கமான நண்பனாவன். என் மீது அதிக அக்கறையாகவும், அவ்வப்போது என்னை உரிமையுடன் கண்டிக்கும் ஒரு சகோதரனாகவும் இருந்தான், எல்லாம் குடும்பம் என்று வந்துவிட்டால் கூட்டுக்குள் போய்விடும் வழக்கமாக இவனும் வெளியுலகை மறந்தவனாகிவிட்டவனான்.

Subscribe to:
Posts (Atom)