Thursday, December 20, 2007

எனது ஊரைப்பற்றி.....

சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் வழியில் மம்பட்டியான் வாழ்ந்ததாக கூறப்படும் மேச்சேரியில் இருந்து சுமார் 10 கி।மீ தொலைவிலும் மேட்டூருக்கு 10 கி।மீ தூரம் முன்பே உள்ள ஒரு சிற்றூர்தான் கந்தனூர்। முருகனை வழிபடும் கந்தன் கூட்டம் என்ற கூட்டத்து மக்கள் அதிகம் வாழும் பகுதி ஆதலால் கந்தனூர் என்று அழைக்கப்படுகிறது। அதாவது ஒரு குறிப்பிட்ட சாதியில் பல்வேறு உட்பிரிவுகள் உண்டு, அந்த உட்பிரிவுகளுக்குள்ளேயே பங்காளிகள் உண்டு இந்த பங்காளிகள் ஒரு கூட்டமாக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுவார்கள், இவர்கள் மற்ற கூட்டம் அதாவது வேறு குலதெய்வத்தை வழிபடும் கூட்டத்தில்தான் பெண் எடுப்பார்கள் ஆனால் சாதி இனம் எல்லாம் ஒன்றேதான். இது பெண் எடுக்கும் முறைக்காக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அனைவரும் அனைத்து கடவுளரையும் வணங்குகிறார்கள், குலதெய்வம் தான் வெவ்வேறாக உள்ளது. இது அனைத்து சாதியிலுமே உள்ளது. இந்த கந்தனூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எதிரெதிரே இரண்டு பெட்டிகடைகள் இருந்தது போய் இப்போது மளிகை கடைகள் வந்துவிட்டதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நிறுத்திலேயே புளியமரத்தடியில் ஒரு சவரக்கடை, வயதானவர்கள் ஏழை எளியவர்கள் மட்டுமே இந்த கடையை பயன்படுத்துகிறார்கள்.

கிராமத்தில் உள்ள தோட்டத்து வீடு.....

சாலையை கடந்து எதிரே உள்ள புளியமரத்தை தொட்டாற்போல் உள்ள வீட்டை ஒட்டி வடக்கு நோக்கி செல்லும் ஒத்தையடி பாதையில் சென்றால் ஒரு வயல்வெளி பச்சை கம்பளம் விரித்து உங்களை வரவேற்கும், இடையிடையே வயலில் உள்ள தெண்ணைமரங்கள் உங்கள் மணதை கொள்ளைகொள்ளும், சமயத்தில் வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்து வரும் வேளையில் கால்களை நனைத்துக்கொண்டு ஒரு சிறு பிள்ளைப்போல் விளையாட தோன்றும், வயலைக்கடந்தால் நின்றால் சற்று பள்ளமான பகுதியில் பாறைகளாலான பாதை தெரியும், நட்டு வைக்கப்பட்ட பருத்த இடுப்பளவு உயரமுள்ள ஒரு ஜோடி பாறங்கல்லின் இடையே புகுந்து செல்லும்போது உங்கள் ஆரோக்கியத்தையும் இடையின் அளவையும் கணக்கெடுத்துவிடலாம், பாறையாலான படிகல்லை தாண்டினால் ஆளறமற்ற ஒரு ஒற்றை கூரைவீடு ஒரு கிழவன் கிழவி கோலூண்றி வாழ்ந்த கதையை சொல்லும், வீட்டிற்கு பின்புறம் நிலமட்டத்தின் கீழ் ஒரு வரண்ட கிணற்றை எட்டி ஏளனமாக பார்த்தால் வாராது வந்த விருந்தாளியிடம் நானும் ஒரு காலத்தில் சுரந்தவள் தான் என்று உள்ளிருந்து மௌனமாய் பேசும், கிண்ற்றை தொட்டு நடந்தால் வானளாவ வளர்ந்த பணைமரங்களின் கீழே பலர் காத்துக்கிடந்து கருவாடு வறுத்து கள்குடித்த வாசத்தை மீண்டும் வரவழைக்கும்। நேர்வழியில் வரும் பெரிய மண்தடம் தாட்டினால் நீங்கள் வேண்டாமென்றாலும் கண்களை கவரும் வெளிர் ஊதா(பிங்க) நிற வீடு அகல திறந்த வெள்ச்சுவரின் கதவுகள் உங்களை வரவேற்கும், பரந்த வாசல், பசும்புல் தரையுடன் ஒரு சிறிய பூங்கா, வீட்டை தாண்டி வந்து அழைக்கும் மாந்தோட்டம், அந்த மாந்தோட்டத்தின் மண்ணிலிருந்தும் என்னை அடையாளம் கண்டுகொள்ளும் என் தாய்.

பெற்றோர் குடும்ப பின்னனி............

கந்தனூர் சுமார் 200 குடும்பங்கள் வாழும் பகுதி। சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்ட எமது தாத்தா பொன்னுசாமி, ஒரு தனியார் தொழிற்சாலையில்(தற்போது கெம்ப்லாஸ்ட் சன்மார்) பணியாற்றினாலும் ஒரு விவசாயி। தன் தந்தை வாங்கிய கடனுக்காக சுமார் 20 ஆண்டுகள் பண்ணையில் வேலை செய்திருக்கிறார். கடவுள் நம்பிக்கையும், அதீத மூடநம்பிக்கையை கொண்டது மட்டுமல்லாமல் கோயில் நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பாளர்களாகவும் இருந்த, இருக்கின்ற குடும்பம், படிப்பின் வாசனையே அறியாதவர்கள். வீட்டில் மூன்றாவது பிள்ளையாகவும், இரண்டாவது மகனாகவும் பிறந்த எமது தந்தை கடின உழைப்பளியாகவும் குடும்பத்தில் பொறுப்புமிக்கவராக விளங்கியிருக்கிறார். வீட்டின் மூத்த மகன் அன்றைய நாளில் உலக அளவில் புகழ்பெற்ற மேட்டூர் மில்ஸ் வேலையில் இருந்ததால் எமது தந்தைக்கு வாரிசு வேலையை கொடுத்துள்ளனர். எம் தாயாரின் தாத்தா வெள்ளையர் காலத்தில் மின்சார வாரிய ஊழியராக பணியாற்றியதில் எங்கள் ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கூளையூர்(தற்போது அண்ணா பல்கலைகழத்தின் துனைவேந்தரின் வீட்டை ஒட்டிய வீடு இன்றும் இருக்கிறது, துனைவேந்தரின் தாயாரும் எனது பாட்டியும் அண்ணன் தம்பி மகள்கள்) என்ற கிராமத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திலுள்ள பொம்மிடி என்ற ஊருக்கு மின் கம்பம் இழுத்துச் சென்றவர்கள் அங்கேயே நிலங்கள் வாங்கி குடியேறியிருந்தார்கள். எனது தாயார் வீட்டின் இரண்டாவது பிள்ளை இரண்டாவது மகள். எனது தாய் வழி தாத்தா பொம்மிடியில் கசாப்பு கடையும் மளிகை கடையும் வைத்திருந்தவர், தற்போது தன் மூன்று மகன்களுக்கும் தன் உழைப்பில் சேர்த்த 50 ஏக்கர் நிலத்தை பிரித்துகொடுத்துவிட்டு தண்ணீர் இருந்தும் பாடுபட ஆள் இல்லை என வருத்தத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.அதோடு உறவிலேயே பெண் பார்த்து எமது தாயாரை திருமணம் செய்திருக்கிறார்கள்.

பங்காளிச்சண்டை............

கூட்டுக்குடும்ப வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை। தான் வாங்கும் சம்பளத்தை கவரை உடைக்காமல் தந்தையிடம் கொடுத்துவிட்டு சுமார் 6 கி.மீ தூரம் நடந்தே மூன்று வேளை ஷிப்டுகளில் வேலை பார்த்து போணஸ் பணத்தை முழுமையாக கொடுத்துவிட்ட பின்பும் தலை தீபாவளிக்கு புது துணி எடுக்க பணம் கொடுக்கவில்லை என்பதுதான் விவகாரம். ஆறு மாத சம்பளம் ஏற்கனவே முழுமையாகவும் போணஸ் பணமும் கொடுத்துவிட்ட பின் வாரிசு வேலைக்கென பத்தாயிரம் கொடுத்துவிட்டுதோடு தன் தாத்தா நினைவாக கொடுத்த ஒரு சொம்பு, சாப்பிடும் தட்டு, ஒரு சேவல், ஒரு ஜோடி தோடு, தாலியையும் கழற்றி கொடுத்துவிட்டு தனிக்குடித்தனம் வந்துள்ளனர்.வாரிசு வேலைக்கு சேர்ந்ததற்காக பணம் பத்தாயிரம் பெற்றுக்கொண்டு காட்டை பாகம் பிரித்து கொடுப்பதாக பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. பேசியபடி என் தந்தை பணம் பத்தாயிரம் கொடுத்த பிண்பு பாகம் பிரித்து கொடுக்கமால் அண்ணன் தம்பிகள் மூவர் சேர்ந்து துடப்பத்தால் மூக்கை உடைத்துள்ளார்கள். குடிக்க தண்ணீர் எடுக்க சென்ற என் தாயை "ஏய் பிள்ளை இங்கெல்லாம் தண்ணி எடுக்ககூடாது" என்று தடுத்திருக்கிறார் என் தாத்தா. அடுப்பில் சொறும் பருப்பும் வெந்து கொண்டிருக்கும் போதே வீட்டை பூட்டி சாவியையும் எடுத்து சென்ற என் தாத்தாவிற்கு எங்கள் வீட்டிலேயே பல நாட்கள் கோழியும், மீனும் செய்து போட்டிருக்கிறோம்.

பிறப்பு...........

மண் சுவர், தெண்ணங்கீற்றால் வேயப்பட்ட குடிசையில் குடிப்புகுந்தனர்। குடும்பத்தாரால் நிம்மதி நீடிக்கவில்லை என்றாலும் சிரமத்திலேயே காலத்தை நகர்த்தினர். முதல் பிள்ளை என்பதாலோ என்னவோ நான் பிறந்தது மேட்டூர் அரசு மருத்துவமணையில். அடுத்தடுத்து 4 பெண் குழந்தைகள் இரண்டு பெண் சிசுக்கள் என் பெரியம்மாள் கல்லிப்பால் கொடுத்துக் கொல்லப்பட்டதை தடுக்கும் வயது எனக்கில்லை அப்போது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது நான் அந்த பிஞ்சுகளை கொல்லவிடாமல் அழுததும், ஆனால் அதை பொருட்படுத்தாமல் கொலை செய்த பாதகமும் நான் இன்றும் வேதனையோடு சில நேரங்களில் நினைத்துக்கொள்வது உண்டு. இப்போது அந்த பிஞ்சுகளை யார் யார் என்ன சடங்குகள் செய்து எங்கு புதைத்தார்கள் என்பது என் நெஞ்சில் நிழலாடுகிறது.

குழந்தைப்பருவம்.........

இந்த வீடு எதோ பெருமையாக இருந்தாலும் நான் மண்ணில் விளையாடிய போது இருந்த கூரை வீடு, அவசரமாய் நான் அரைக்கால் சட்டையை கழற்றிவிட்டு ஒடி முக்கிகொண்டு உட்கார்ந்த வெளிக்காடு இப்போது இல்லாதது மீண்டும் ஒருமுறை அந்த கவலையறியாத வாழ்வு வாராத என்ற ஏக்கம் தேங்குகிறது। குடியிருந்த குடிசை, வலதுபுறமாய் ஒரு பலகைகல்லின் மீது நிறுத்தி என்னை குளிக்க வைத்தது, அருகிலேயே இருந்த பப்பாளி மரம், இரவில் பயமுறுத்தும் அவரை புதர், வீட்டின் இடதுபுறம் இருந்து மாட்டுக்கூரை, அருக்கிலேயே எருக்குழி, மாட்டுசாணியை அள்ளி தூக்கமுடியாமல் புட்டியை பின்னாலேயே இழுத்துக் கொண்டுபோய் எருக்குழியில் தள்ளிவிட்டு அதிலேயே குதித்து புட்டியை மீண்டும் எடுத்து வந்தது, நெல்லம்பில் குத்தாரியிலிருந்து தொங்கி தொங்கி மாட்டுக்கு தீனி இழுத்துபோட்டது. தவிட்டை தாழியில் கொட்டி மாட்டைபிடித்துக் கொண்டு தண்ணீர் காட்டியது, பந்தை உயர தூக்கி போட்டு பிடிக்கும் போது பந்தில் கவனமாய் காட்டில் வலது ஓரமாய் இருந்த பணங்கட்டையில் காலை கிழித்துக்கொண்டு இரத்தம் கொட்டியது எல்லாம் போய் இப்போது தோட்டமாகிவிட்டது. முன்பு போல் யார் வீட்டிலும் பிள்ளைகள் கோலி விளையாடுவதில்லை, எல்லாம் டி.வி தான்.

ராமு........

இந்த இடத்தில் நிச்சயமாக நான் பிள்ளை பருவத்தில் பாசத்தோடு பழகிய நாய் ராமுவை நினைவு கூறுகிறேன்। நாயின் விசுவாசம் கூட மனிதர்களிடம் இல்லை என்பது உண்மை என்பதை நாம் பல நேரங்களில் காண்கிறோம். ஆனால் எங்களில் ஒன்றாக வாழ்ந்த ராமுவை நான் சாகும் நாளில் கூட மறக்கமாட்டேன். என்னருகே யார் இல்லாவிட்டாலும் ராமு இருப்பான், எங்கள் வீட்டு மாட்டுக்கட்டாந்தரையில் யாரும் சானியைக்கூட தொட முடியாது. என் பெற்றோரை தவிர யாரும் என்னை தொட்டுவிடமுடியாது. எங்கள் வீட்டிற்கு யார் வருவதாக இருந்தாலும் வீட்டிலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் இருந்தே குரல் கொடுக்கவேண்டும், ராமு பழக்கப்படுத்தப்பட்டவன் அல்ல. அவன் தானாக விசுவாசத்துடன் வாழ்ந்தவன். நான் பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் அவன் செய்த பிரச்சனைகள் நீங்கள் கேட்டிருக்ககூட வாய்பில்லை, நான் ஏறும் அரசுப்பேருந்தில் ஏறிக்கொண்டு தினமும் அவன் செய்யும் தொல்லை, பல நாட்கள் அவனை இறங்கவைக்க என்னையே இறக்கிவிட்டு போய்விட்டார்கள். எங்களால் தினமும் இந்த பிரச்சனை என்று நடத்துனரிடம் சலிப்பு, நான் வீடு திரும்பும் நேரம் எனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பான், பல வருடம் கானாமல் இருந்த காதலியை பார்த்ததுபோல் அவன் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே, அதற்காக நான் மீண்டும் பிள்ளையாய் பிறக்கவேண்டும், அவனும் அதே குடிசையில் மீண்டும் வேண்டும். ஒரு நாள் பேருந்து போய்விட பள்ளிக்கு நேரமானதால் உறவினர் ஒருவருடன் சைக்கிளில் அனுப்பினார்கள் சைக்கிளுடனே பள்ளிக்கு வந்துவிட்ட ராமுவை வெளியே விட்டு பள்ளிக்கூட கேட்டை மூட காவலாளி பட்ட சிரமம் இருக்கிறதே அது கொடுமை, அதைவிட கொடுமை வகுப்பில் அமர்ந்துகொண்டு ராமு வீட்டிற்கு போயிருப்பானா, இல்லை வெளியிலேயே காத்திருக்கிறானா, ஒருவேளை வீட்டிற்கு போகும் வழியில் அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற கவலைதான் எனக்கு பெருங்கவலையாக இருந்தது. மாலை வரை காத்திருந்த ராமுவையும் என்னையும் என் தந்தை வந்து அழைத்து சென்றார். ஒருமுறை தாய்வழி தாத்தா வீட்டிற்கு நாங்கள் சென்றிருக்க உடனே ஊர் திரும்பமுடியாத அளவு மழை, மூண்று நாட்கள் கழித்து வீடு திரும்பும் போது பாதி வழியிலேயே தெரிந்துவிட்டது மேற்கூரை கானவில்லை என்பது, போட்டு வைத்த பண்டம் பாத்திரம் அனைத்தும் அப்படியே இருக்க ராமு பக்கத்திலேயே இருந்தான், கூரை எப்போது கானாமல் போனதோ தெரியவில்லை. மனிதன் இருந்திருந்தால் கூட தனக்கு பாதுகாப்பு தேடி போயிருப்பான். என்னை அன்போடு கொஞ்ச என்னை தூக்க முற்பட்ட என் சித்தப்பாவின் கண்ணத்திலிருந்த கறியை பிடுங்கிவிட்டான் ராமு. என்னை பார்க்கும் போதெல்லாம் இப்போதும் அவர்கள் நினைவில் வருபவன் ராமு. இப்படி எங்களை பகை நிழலாய் தொடர்ந்த காலத்தில் எங்களுக்கு அரனாய் இருந்த ராமுவிற்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை, ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அதிகமாக எச்சில் ஊற்ற ஆரம்பித்தவனை எந்த மருந்தாலும் காப்பாற்ற முடியவில்லை, அவன் ஒரு மதிய நேரம் மரணமடைந்ததை என் கண்ணிலேயே பார்க்கும்படியாகிவிட்டது. என் தாயை இழந்த போது எனக்கு 26 வயது, ஆனால் சிறு பிள்ளையாய் இருந்த போது ராமுவை இழந்து அந்த இழப்பை யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியாமல் நான் பல நாள் தனியாகவும் இரவிலும் அழுது, பேருந்துக்காக நடக்கும் தனிமையான நேரங்கள் என்னை மிகவும் வருத்தியது, இந்த துயரம் தனிய நீண்ட காலம் ஆனது. இப்படி சொல்லாமல் எனக்குள் புதைக்கப்பட்ட பாசத்தின் பிரிவு, அந்த பிரிவின் துயரம் ஒரு மென்மையின் மீதும் ஒரு மனிதநேயத்தின் மீதும் எனக்கு நீங்காத காதலை ஏற்படுத்திவிட்டது என்ற எண்ணம் எனக்குள் பல நேரங்களில் எழுந்துள்ளது. பிஞ்சு உள்ளத்தில் விதைக்கப்பட்ட ராமுவின் பாசம் உயிரின் மதிப்பை உணர்த்தியிருக்கிறது. ராமு புதைக்கப்பட்ட இடத்தை இப்போதும் அவ்வப்போது சென்று பார்ப்பது நான் இழந்துவிட்ட குழந்தை பருவத்தையும், அப்போது இருந்த உண்மைக்கும், இப்போது வாழும் வாழ்க்கைக்கும் எவ்வளவோ வேறுபாடுகள், நான் முற்றிலுமாக அந்த மண்ணிலிருந்து அந்நியப்பட்டுவிட்ட ஏமாற்றம் என்னை குத்துகிறது. கிணற்றில் இருந்து நீரை முகண்டு வரும் பறியிலிருந்து வாய்க்காலில் நீர் கொட்டும்போது அரப்பு தலையை வாய்க்காலில் வைப்பது அப்போது மூக்கில் புரை ஏறியது, வாய்க்கால் நீரில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு நீர் என் மீது தவழ்ந்து சென்றதை ரசித்து விளையாடியது, இந்த ஏக்கத்தை தீர்க்க ஒவ்வொரு முறையும் அந்த கிணற்றை எட்டி பார்த்துகொண்டு நிற்பதை தவிர இப்போது வேறேதும் செய்யமுடியாது, இப்போது மோட்டர் கிணறாகிவிட்டது. இப்படி எவ்வளவோ கிராமத்து வாழ்க்கையில் சொல்லலாம், ஒரு கள்ளிக்காட்டு இதிகாசத்தை போலவோ அல்லது கருவாச்சி காவியத்தை போலவோ கடினமான பாதையில் நான் பயணிக்காவிட்டாலும், ஒரு கிராமத்து வாசத்தில் வாழ்ந்தவன் அந்த வாழ்க்கையை அனுபவித்தவன் என்பதில் எனக்கோர் பெருமையிருப்பது மட்டுமல்லாமல் பொதுவாக கிராம மக்களுக்காக குரல் கொடுக்கும் கடமையும் எனக்கு உள்ளது.

கல்வி........

பொதுவாக பாதிக்கப்பட்டவர்கள் மிக விரைவாக முன்னுக்கு வருவதில் முனைப்பு காட்டுவார்கள், அப்படித்தான் என் தந்தையும் தான் கல்வி கற்காத காரணத்தால் என்னை ஆங்கில வழியில் படிக்கவைத்தனர்। ஆனால் கல்வியை தவிர நான் ஒரு சராசரி குழந்தைகளைப்போல விளையாடவோ பொழுதுபோக்கவோ அனுமதிக்கப்படவில்லை। விவரமறிந்த நாள் முதல் கல்லூரியில் கால் வைத்த பிறகும் அவ்வப்போது மாடு மேய்ப்பது, காட்டு வேலைகளை செய்வது, என ஓயாமல் ஏதாவது வேலையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். ஆறேழு மாடுகள் என்றிருந்த காலத்தில் நாங்கள் சிறு பிள்ளைகள், எங்களை பள்ளிக்கு அனுப்பவேண்டும், மாடுகளுக்கு தண்ணீர் எடுக்கவேண்டும், தீவணம் போடவேண்டும், வீட்டை கவனிக்கவேண்டும், சமைக்கவேண்டும், காட்டில் வேலை செய்யவேண்டும், பால் கறக்கவேண்டும், இப்படி மாடாய் உழைத்தவள் என் தாய், 16 வயதில் கல்யாணமாகி 44 வயதில் 6 பிள்ளைகளை பெற்று 4 பிள்ளைகளை வளர்த்து, ஒரு மகனை முழுமையாய் ஆளாக்கி பார்த்ததோடு சரி, யாருக்கும் அப்போது திருமணமாகியிருக்கவில்லை, யாரும் என் தாயார் இப்படி ஒரு நோயால் இறந்து போவாள் என நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தில் எவ்வளவு வளர்ந்த பிள்ளைகளாய் இருந்தாலும் தாய் என்பவள் இல்லையேல் எவ்வள்வு பெரிய இழப்பு என்பது எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதுவும் இரண்டு கல்யாண வயது பெண்கள் இருக்கும் போது. இன்றும் என் தாயிருந்தால் இந்த சூழ்நிலையில் என்ன எடுப்பாள் என்று ஒருமுறை யோசித்து பார்த்துவிட்டுதான் எந்த முடிவிற்கு வருகிறேன். எல்லோரும் கலந்தாலோசித்து முடிவெடுத்த வந்தோம், இன்று அதில் ஒரு ஜீவன் இல்லை. பள்ளிக்கூடத்தில் படிப்பை தவிர மற்ற விசயங்களில் என்னை எந்த அளவு ஊக்குவிக்கவேண்டும் என்றெல்லாம் என் பெற்றோர் எப்போதாவது நினைத்தார்களா தெரியவில்லை. ஆனால் பொய் சொல்வது என் தந்தைக்கு முற்றிலும் பிடிக்காத விசயம். ஆனால் அவர் இப்போதெல்லாம் நிறைய பேசுகிறார். நானாக விரும்பி ஏதாவது கேட்டால் காரண காரியங்களை தெரிந்துகொண்டு வாங்கி கொடுப்பார்கள். தின்பண்டங்களுக்கு குறை வைப்பதில்லை. ஆனால் கடைத்தெருவில தின்ன அனுமதியில்லை, வாங்கி வந்து வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என்ற ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டேன். நாண்காம் வகுப்பில் ஹிந்தியை ஒரு பாடமாக எடுத்து படித்தேன் 1986ம் ஆண்டு என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள், அதுமட்டுமல்லாமல் அப்போதே பிராத்மிக் என்ற தேர்வையும் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அப்போதெல்லாம் தமிழ் பற்று என்பதெல்லாம் என் சிந்தனையில் இல்லை. ஆனால் தமிழாசிரியைகளின் மீது மரியாதையையும் பற்றும் இருந்தது, காரணம் அவர்களின் அன்பும் அரவனைப்பும் இருந்தது. தமிழ்செல்வி, அலமேலு மங்கை, நிர்மலா, என தமிழாசிரியைகள் என் தலையை யார் வாரிவிட்டார்கள் என்று கேட்பதில் இருந்து, நகசுத்தி வந்த போது அக்கறையாய் விரலைபிடித்து மெதுவாய் எழுத பழக்கியவர்கள் தமிழாசிரியைகள் தான். இன்றும் தலைமுடியெல்லாம் வெள்ளையாகி போய்விட்ட தமிழ்செல்வி ஆசிரியை நான் பார்க்காவிட்டாலும் என்னை கண்டு நலம் விசாரிப்பது ஒரு தாயாய் எங்களிடம் அன்பு பாராட்டிய இந்த நல்ல உள்ளங்களுக்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி எழுகிறது.

சிந்தனை..................

மேட்டூரில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் எல்।கே.ஜி பதினைந்து நாள் படித்த நான் விடுபிள்ள எங்கப்பாகிட்ட போறேன்னு அங்கியணிந்த சிஸ்டர்களை சிறுபிள்ளைகள் என நினைத்து பேசியது இப்போதும் சொல்லி சிரித்துகொள்ளும் வேடிக்கையாகிவிட்டது. 15 நாளில் சிஸ்டர்கள்டமிருந்து விடுதலை பெற்றாளும் ஏதோ காரணத்தால் அந்த பிஞ்சு உள்ளத்தில் அவர்களை சிரமப்படுத்துகிறோமோ என்ற கவலையுடனும் மீண்டும் இந்த பள்ளிக்கு வரப்போவதுமில்லை இந்த வெள்ளை தேவதைகளோடு முழு பலத்துடன் சண்டை போடப்போவதுமில்லை என்று ஒருவித பயம் கலந்த விடுதலையுடன் சற்று அருகாமையில் உள்ள ஆங்கிலப்பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அங்கே நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நடமாடும் புத்தக கடையுடன் வந்த ஒரு இராமன் பிரச்சாரக் கூட்டம் மூன்று நாட்கள் அங்கே அடித்த கொட்டம் அப்போதே எனக்கு பிடித்திருக்கவில்லை. எதோ ஒரு இல்லாத கருமத்தை சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் என் நெஞ்சில் பல கேள்விகளோடு கூட்டத்தில் கோவிந்தா போட்டுக்கொண்டிருந்தேன். பின் சில நாள் வீட்டில் இருந்த உண்டியல் காசை திருடி மாட்டிக்கொண்டேன், இதற்கு ஆரம்பத்தில் உண்டியல் காசை எடுத்தால் சாமி கண்ணை குத்திவிடும் என்ற மிரட்டல் வந்ததுதான் நான் நாத்திகனானதற்கு முதல் காரணம். நான் தொடர்ந்து உண்டியல் காசை திருடியதும், சாமி கண்ணை குத்தாமல் போனதும் இருப்பினும் என் இரவு தூக்கம் போனதும், பின் இனி சாமி காலம் கடந்து கண்ணை குத்த வாய்ப்பில்லை என்ற முடிவிற்கு வந்தவனிடம் சாமியே இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் தலைதூக்கியது. எங்கள் காட்டுக்கு அருகே உள்ள மாதேஸ்வரன் கோவில் ஒன்றில் பொங்கல் பண்டிகையின் போது சீரியல் அலங்காரம் செய்து காளைகளை விரட்டி ஜல்லிக்கட்டு நடத்துவார்கள், அன்று மட்டும் அந்த கோயிலில் படையல் வைத்து கும்பிடுவதும் பூசாரி ஒரு பழத்தையும், அரைமூடி தேங்காயையும் எடுத்துக்கொள்வது எனக்குள் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது எதற்காக இவன் நம் தேங்காயையும் பழத்தையும் எடுக்கிறான் என்ற கேள்விக்கு சாமிக்கு என்று என் தந்தை கூறினார். சாமியோ கல், இன்று தவிர வருடமுழுவதும் கேட்பாரற்று கிடக்கும் இந்த கல் எப்படி தின்னும் என்ற கேள்வியுடன் அடுத்த நாள் கோயிலுக்கு சென்று பார்த்தால் பழம் தேங்காய் எல்லாம் கானவில்லை, எனினும் இது பூசாரி வீட்டிற்கு போய்விட்டது என்பதை அறிந்துகொண்டேன். மேலும் இந்த காளைகளை கோயிலை சுற்றி விரட்டுவதும் மக்கள் தெரித்து ஓடுவதும் ஒரு விதமான் எரிச்சலையும் பயத்தையும் ஏற்படுத்தியது. இதுவே நாளடைவில் கடவுள் மறுப்பாக மாற காரணமாகியது.

பெற்றோர் பாசம்................

நாண்காம் வகுப்பு படிக்கும் போது கிராமத்தில் அடுப்பு எரியாமல் புகைய அம்மாவிற்கு உதவியா இருக்குமே என மாடு கழித்துவிட்ட சருகுகளை எடுக்க போனவன் கீழே விழுந்து கையை முறித்துக்கொண்டேன், கை முறிந்துவிட்டது என்பதை எப்படி சொல்வது என்று புரியாமல் விழித்தேன்। நேரமோ இரவு எட்டு மணி படித்துக்கொண்டிருந்தவனுக்கு பச்சை விற்கால் அடுப்பு எரியாமல் புகைவதும் அம்மாவின் புலம்பல் பொருக்காமலும் தான் சருகு பொருக்கப்போனேன், ஆனால் இருட்டில் பயந்து ஓடிவந்து விழுந்து இந்த நிலைமை। ஆனால் மனதளராமல் வலதுகையால் ஒடிந்த இடதுகையை பிடித்துக்கொண்டே போய் வாசலில் நின்று "அம்மா கை ஒடிஞ்சு போச்சு என்றேன்" என்னடா ராசா சொல்ற என்று கத்திகொண்டு ஓடிவந்தவளிடம் பயத்தில் வாய் குழறியபடியே சொன்னேன், ஏதோ உயிரே போய்விட்டது போல் அடித்துக்கொண்டது அழுததை பார்க்கும்போது எனக்கு இருந்த நம்பிக்கையும் போய்விட்டது। இங்கே அன்னையின் அழுகுரலால் நொடி நேரத்தில் பெரும் கூட்டமே கூடிவிட்டது. உடனே என்னை அள்ளிக்கொண்டு அந்த இரவு நேரம் மக்கள் வரிசையாய் அழுதபடியே ஒற்றையடி பாதையில் நடக்க, எனக்கு நம்மால் இவ்வளவு பெரிய துன்பம் வந்துவிட்டதே இத்தனை பேருக்கும் என்ற குற்ற உணர்வு. கூடவே வெளியே ஏதோ வேலையாய் போன என் தந்தையின் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ என்ற கவலை. எங்கோ இருந்தவருக்கு தகவல் கிடைத்து அலறியடித்து ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதவரை கூடியிருந்தவர்கள் தேற்ற நேரமாகிவிட்டது. உடனே அப்போது டாக்சி என்றால் பெரிய விசயம், டாக்சி பிடித்து வருவதற்குள் நான் தூங்கிவிட்டேன். டாக்சியுடன் வந்து என்னை அரை தூக்கத்தில் அள்ளி பின் சீட்டில் படுக்கவைத்துக்கொண்டு நல்லாம்பட்டியை நோக்கி வேகம் பிடித்தது மகிழுந்து. நல்லாம்பட்டியை அடைந்தபோது நள்ளிரவு 2 மணி. மான் தோள் மீது படுத்திருந்த பெரியவர், தருமபுரி தமிழில் பேசிக்கொண்டே என்னை அருகில் அமரவைத்துக்கொண்டு கையை பிடித்து ஆட்டிப்பார்த்தார். பின்னர் பயப்படவேண்டாம் ஒன்னுமில்ல எளம்பிஞ்சு கை நாலுகட்டுல கை வித்தியாசம் தெரியாம கூடிடும் என்றார். அவர் நல்ல போதையில் இருந்தார், எனினும் அனுபவம், அவரது பார்வை, மிக எளிதாக பாதிப்பை கண்டறியும் விதம், என்னை தன்னருகிலேயே படுத்துகொள்ள சொன்னார். ஆனால் எங்களுக்கு தனி படுக்கை கொடுக்கப்பட்டது. கால் ஒடிந்தவர்கள், கை ஒடிந்தவர்கள், நெஞ்செலும்பு ஒடிந்தவர்கள் என சுமார் 30 பேருக்குமேல் அங்கேயே தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நடக்கமுடியாதவர்களின் கழிவுகளை எடுக்கும் பெட்பேன் போன்றவையிலிருந்து வரும் நாற்றம் மற்றும் வலி துளியும் தூங்கவிடவில்லை. விடிந்ததும் கையை அதன் பழைய இடத்தில் பொருத்தி நீட்டி மடக்குகிறார்களே அப்போது ஏற்படும் வலி இருக்கிறதே அதற்கு எந்த ஊசியும் போடுவதில்லை. எனக்கென்னவோ அப்போது பார்க்கும்போது மனிதநேயம் உள்ளவர்களாக தெரியவில்லை. பச்சையிலை, முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் இவற்றை கொண்டு கட்டு போடுகிறார்களே என்ன ஒரு அனுபவம், ஒருவனின் உயிர்வலியோடு விளையாடுகிறார்கள். எந்த கட்டணமும் இந்த வைத்தியத்திற்காக அவர்கள் வாங்குவதில்லை என்பதை அறிந்தால் நீங்கள் வியந்துதான் போவீர்கள். ஆம், ஒரு உண்டியல் வைத்து இருக்கிறார்கள் அந்த உண்டியலில் விரும்பினால், முடிந்தால், காசு போடலாம். இன்றும் அந்த நல்லாம்பட்டி இயற்கை எலும்பு முறிவு மருத்துவமனைக்கு ஈடு இனை உலகில் இல்லை என்று என்னால் தீர்க்கமாக கூறமுடியும். ஒரு டாக்டரால் முடியாத சிகிச்சையை எந்த அறுவை சிகிச்சையும் இன்றி இவர்க்ள் செய்யும் சிகிச்சையால் பயனடைந்தவர்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம், இதை இவர்கள் ஐந்து தலைமுறையாக செய்துவருகிறார்கள்.


விபத்துகள்..............

மாலை நேரம் பள்ளியைவிட்டு வந்துகொண்டிருந்தோம் அப்போது நான் மூன்றாம் வகுப்புதான் படிப்பேன் என்று நினைக்கிறேன், அந்த பேருந்து நிறுத்தம் இரண்டு பாதைகள் ஒன்றாய் செருமிடம், நான் ஒரு பாதையில் வந்து மறுபாதையில் செல்லவேண்டியவன். நான் பேருந்து நிறுத்தத்தை நெருங்க நெருங்க எங்கள் பேருந்து வந்துவிட்டது அவசர அவசரமாக புத்தக மூட்டையை தூக்கிகொண்டு ஓடிவந்தவன் தடுக்கி தனலட்சுமி என்ற பேருந்தின் நடுவண்டிக்கு அடியில் போய்விழுந்துவிட்டேன். எதிரில் இருந்த பொரிக்கடைக்கார அத்தை கத்தியதில் பேருந்து நின்றுவிட்டது இல்லாவிட்டால் சட்டினி ஆகியிருப்பேன் அன்றே. பிறகொருமுறை 8ம் வகுப்பு படிக்கும்போது மாலை 5.15 மனிக்கு மன்ணெண்னை இல்லை எப்படி சமைப்பது என்ற விவாதம் ஓடிக்கொண்டிருக்க உடனே நான் இதோ வந்துவிடுகிறேன் என்று மன்ணெண்னை கேனை எடுத்துக்கொண்டு கிளம்பினேன், வேண்டாம் விறகு வாங்கிகொள்ளலாம் என்றார்கள், கேட்காமல் ஒரு கையில் மன்ணெணைய் கேனை பிடித்துக்கொண்டு ரேசன் கடையை நோக்கி ஒரு கையில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சற்று மேடான பேருந்து செல்லும் சாலையை தொட்டு ஒட்டிவந்தேன், கொஞ்சம் சிரமப்பட்டு ஓட்டிக்கொண்டிருந்தேன். எதிரே ஒரு பேருந்து வந்துகொண்டிருக்க பின்னாலும் ஒரு பேருந்து குறுகலான சாலையில் எதிரெதிரே வாகணங்கள் விலகி செல்ல நான் சைக்கிளை கீழே இறக்கவேண்டிய நிர்பந்தம். என்னை தாண்டிக்கொண்டிருந்த பேருந்து என்னை விலக விலக சைக்கிளை சற்று கட்டுபடுத்தமுடியாமல் நான் கீழே இறக்க முயற்சிக்கும் வேளையில் ஒரு கையில் பிடித்துக்கொண்டிருந்த மன்ணெண்னை கேன் பேருந்தில் லேசாக மோதியதும் நான் புதிதாக போடப்பட்டிருந்த சாலையில் கீழே பலமாக மோதி விழுந்தேன். நான் மண்டைதான் உடைந்துவிட்டது என்று நினைத்துகொண்டிருக்க கையிலிருந்து சதைகிழிந்து கொட்டியது இரத்தம். பிரேக் கையை குத்தி கிழித்திருந்தது, எதிரே டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த தீயணைப்பு துறையை சேர்ந்தவர் ஓடி வந்து தூக்கிகொண்டே கேட்டார் எப்படி நடந்தது என்று நான் பஸ்ல இடிச்சி விழுந்துட்டேன் பிரேக்கு கையை கிழிச்சிருச்சி என்றேன். டே உன்னை இடிச்சிபுட்டு பஸ்சுகாரனே நிறுத்திகிட்டாண்டா பஸ்சு கிழிச்சிருச்சின்னு சொல்லு என்றார், சட்டென ஒளிப்பிறந்தது, உடனே அவர் என்னை தூக்கிகொண்டே பேருந்தின் அருகில் போக பேருந்து நடத்துனர் 20 ரூபாயை கொடுத்து டாக்டர்கிட்ட போய் பாத்துகிட்டு போடா என்றார். மக்கள் கூட்டம் கூடிவிட யோவ் என்னய்யா இருவது ரூவா குடுக்குற பையனுக்கு ஏதாச்சும் ஆயிருந்தா? நிறுத்துடா வண்டிய பையன மொதல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போ என்றனர், அவனா வந்து மாட்டிகிட்டான், இதுகெல்லாம் நான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போகமுடியுமா? டிரிப்பு லேட்டாகுது, தம்பி பக்கத்துலதான் ஆஸ்பத்திரி போய் பாத்துக்கிட்டு போடா என்றவன் மனதில் பேருந்து கிழித்துதான் காயம் ஆகியிருக்கிறது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அங்கிருந்த கூட்டத்தில் எங்கள் வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு கொத்தனார் இருந்தார், அவரோ நமக்கு தெரிஞ்ச பையன் தான் நம்ப ஆர்.சி.பிளாண்டுக்கு வேலைக்கு போறாரே மாரியண்ணன் இல்ல அவிங்க பையன் தான் என்றதும் கூட்டம் அட நம்ப மாரியண்ணமுட்டு பையனா என்று அட அந்த பஸ்சுகாரன உட்ராதிங்கப்பா பாத்தியா பையன்கிட்ட இருவது ரூவாய குடுத்துட்டு ஓட பாக்குறான் என்று ஆளாளாளுக்கு நடத்துனரை மொய்க்க தொடங்கினர். ஏங்க ஓணரு என்ன திட்டுவாருங்க பையன் மேல தாங்க தப்பு என்று நடத்துனர் புலம்பிகொண்டிருக்க அவிங்க அப்பா வர்ற வரிக்கும் பஸ்ச உட்றாதிங்கப்பா என்று சொல்லிவிட்டு கொத்தனார் தனது சில்வர் பிளசில் எங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டிருந்தார், அதற்குள் எதிரே இருந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுவிட்டேன். நடத்துனரும் நடந்த விவரத்தை பேருந்து உரிமையாளரிடம் சொல்லிவிட்டார். சிறிது நேரத்தில் அப்பா அம்மா, சித்தி, சித்தப்பா என அனைவரும் வந்திருந்தனர். ஏண்டா பையன்கிட்ட இருவது ரூவா குடுத்து பாத்துக்கிட்டு போக சொன்னியாமே உசுருக்கு ஏதாச்சும் ஆயிருந்தா என்று கையை ஓங்க நடத்துனர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அமைதியாக நின்றிருந்தார். காயம் ஆழமாக இருந்ததால் தையல் போடவேண்டும் பெற்றோர் வரட்டும் என காத்திருந்த மருத்துவர் என் தந்தையிடம் ஆலோசித்துவிட்டு ட வடிவத்தில் கிழிந்திருந்த காயத்தில் பக்கவாட்டில் கிழிந்திருந்த பகுதியை மட்டும் தைக்கலாம் என்று முடிவு செய்து மயக்க மருந்து கொடுத்தனர். தையல் போட்டால் தழும்பு மறையாதாம். ஆனால் தையல் போடாத இடத்திலுள்ள தழும்பும் மறையவில்லை. இப்போதும் நான் கொடுக்கும் அடையாளம் வலது முன்கையில் பெரிய தழும்பு என்பதுதான் எனது இரண்டாவது அடையாளம். மயக்கம் தெளிந்து பார்க்க கை வலியெடுக்க ஆரம்பித்து அழுதுகொண்டிருக்க என் அம்மாவும் அழுதுகொண்டிருந்தார். பேருந்து நிறுத்தப்பட்டது நிறுத்தப்பட்டதுதான், சுமார் மூன்று மணி நேரத்தில் சேறு படிந்த வேட்டியுடன் தன் தோட்டத்திலிருந்து ஆம்னியில் வந்தார் ஸ்ரீ பாலாஜி டிராண்ஸ்போர்ட் உரிமையாளர், வந்ததும் தனது நடத்துனரை ஏண்டா அறிவில்ல அடிபட்டதும் பையன ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கனுமில்ல இருவது ரூவா எதுக்குடா குடுத்த நாயி என்று காரணமறிந்து திட்டியவர் அண்ணா ஏற்கனவே ரெண்டு சிங்கிள் வீனாய்போச்சுங்கண்ணா பையனுக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் நான் பாத்துக்குறேன் வண்டி போகட்டுங்கண்ணா என்றார் பக்குவமாக உடனே வண்டி விடுவிக்கப்பட்டது. எனக்குகூட வண்டி நிறுத்தப்பட்டது கொஞ்சம் ஓவராக தெரிந்தது, ஆனால் சிலர் பேச தெரியாமல் பேசி காரியத்தை கெடுத்துகொண்டால் இந்த நிலைமைதான். தனது ஆம்னியில் அழைத்துக்கொண்டு மேட்டூரில் உள்ள சற்று வசதியான மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு கையை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏதுமில்லை என்று உறுதி செய்யப்பட்டது, பின்னர் எங்களை வீட்டில் விட்டுவிட்டு புறப்பட்டார் பேருந்து உரிமையாளர், அவருக்கு மொத்தமாகவே முன்னூறு ரூபாய்க்குள் தான் செலவு. தவறு முற்றிலும் என் மீதுதான் ஆனால் பொது இடத்தில் நடந்த விபத்தால் விசயம் பெரிதாகிவிட்டது, காயம் சற்று ஆழமானது ஒரு காரணம் நடத்துனரின் பொறுப்பற்ற பேச்சும் மக்களின் உள்ளூர் அனுதாபமும் விவகாரமாகிவிட்டது.

ஒருமுறை கையை ஒடித்துக்கொண்டதோடு இருக்கவில்லை, 9ம் வகுப்பு படிக்கும்போது மதிய உணவு இடைவேளையில் கால்பந்து விளையாடி ஒருவர் காலில் ஒருவர் மாட்டி கீழே விழுந்து ஏற்கனவே ஒடிந்த கையின் மூட்டு விலகிவிட்டது. உடைந்த கை உடையாமல் மூட்டு விலகியிருக்கிறது என்றால் நல்லாம்பட்டி கட்டு எவ்வளவு உறுதியாக கையை பொறுத்தியிருக்கும்? பாருங்கள். ஆனால் இந்த முறை கை உடைந்தபோது அவ்வளவாக வீட்டிலிருந்து அக்கறையில்லை, அடிக்கடி இப்படி பொறுப்பில்லாமல் பிரச்சனைகளை கொண்டு வருவதும் சற்று வளர்ந்துவிட்டேன் என்ற காரணமாகவும் இருக்கலாம். சுமார் 7 அல்லது 8 வயது இருக்கும் போது ஒரு தீபாவளியின் போது மரத்திலேறி வழுக்கி விழுந்து கால்முட்டிக்கு கீழே பெரிய காயத்துடன் திட்டு வாங்கிகொண்டிருந்தவன் என் பெரியப்பாவிட்டிலிருந்து வெடிக்காத பட்டாசுகளை பொறுக்கி வந்து எங்கள் அடுப்பில் போட்டது தான் வினை ஒரு பட்டாசு கண்ணிலேயே சீரியடித்தது இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன. ஒரு வாரம் கண்ணில் தண்ணீர் நிற்கவில்லை, கண் எரிச்சலும் தாங்கமுடியவில்லை. ஆனால யாரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை இப்போதுகூட அந்த வேதனையும் எரிச்சலும் மறக்கமுடியவில்லை. சில நேரம் நமக்கு பெற்றோரின் அலட்சியம் இவர்களுக்கு நம் மீது என்ன பற்று இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. சிறு பிள்ளை தவறு செய்வது அறியாமை அல்லது ஆவல் ஆனால் கண் போய்விட்டால் என்ன செய்வது, இந்த விசயத்தில் அலட்சியம் காட்டிவிட்டார்கள், ஆனால் நல்லவேளையாக கண் பிரச்சனை நாள்பட சரியாகிவிட்டது. ஆனால் வயதாகும் போதுதான் தெரியும் விளைவு.

இடப்பெயர்வு..........

6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் எனது பெரியப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் வேலை போய் மீண்டும் அண்ணன் தம்பிகளின் பிரச்சனை தலைதூக்கியது। ஒரு நாள் மாலை கடைசி சித்தப்பன் குடித்துவிட்டு வந்து தனக்கு வேலையில் சேர ரூ10,000 பணம் தேவை என சண்டையிட, ஏற்கனவே தான் கொடுத்த பத்தாயிரத்தை பெற்றுக்கொண்டு பாகம் பிரித்துக்கொடுக்காத நிலையில் சம்பந்தமில்லாமல் தான் எதற்கு பணம் தரவேண்டும் என்று கூறிவிட, தன் தேவை பூர்த்தி செய்யப்படாத எரிச்சலில் பேசிக்கொண்டிருந்தவனை சட்டென எழுந்து பலரும் தடுத்து கேட்காமல் என் தந்தை நெஞ்சில் உதைத்ததுதான் மல்லாந்து விழுந்தவரை கொண்றுவிட்டதாக அங்கு ஒரு ஒப்பாரி பாட எங்கள் வீட்டில் ஒரு பயம் தொற்றிக்கொண்டது, இந்த பிரச்சனை எதுவரை போகுமோ என்று। அடுத்த நாள் என் பெரியப்பா தன் வீட்டை விற்கப்போவதாகவும் அதை என் தந்தை வைத்துக்கொள்ளவேண்டும் என நிர்பந்தப்படுத்தப்பட இதில் உடன்பாடில்லாத என் தந்தை தான் வாழ்ந்த அந்த கூரையையும் காலி செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார். என்னிடம் கேட்டதற்கு அந்த கிராமத்தை விட்டு பிரிய மணமில்லையென்றாலும், அங்கு நிலவிய சூழ்நிலை பதற்றமாகவே இருந்ததால் நானும் போகலாம் என்று கூறிவிட்டேன். என் மாமவிற்காக நாங்கள் நகரப்பகுதியில் வாங்கி வைத்திருந்த இடத்தில் ஒரு கூரை போட்டுக்கொண்டு போய்விடலாம் என்ற எண்ணம் என் தாய்க்கு கூட கடைசி வரை தெரியாது. அண்மையில் போடப்பட்ட கூரையை ஏன் பிரிக்கிறார்கள் என்ற காரணம் புரியாமல் சிலர் கேட்கவே தான் குடிபெயரும் விசயமே என் தாய்க்கு தெரியும். ஆனால் மதியம் வரை கிணற்றின் அருகே துவைத்துக்கொண்டிருந்தவளுக்கு சரக்குந்து வந்தபின் தான் இனி இந்த கிராம வாழ்க்கை முற்று பெற்றதாக நினைத்து இருப்பாள். ஆனால் அந்த நகர்புறத்தின் கடைசியிலிருந்த நாண்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மாடு வளர்க்கப்போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. கூரை வேண்டாம், ஓடு போடலாம் என நினைத்து, ஓடு போடுவதற்கு இரண்டு அறை கொண்ட மெத்தை வீடு கட்டலாம் என்ற எண்ணத்திற்கு வந்து கடைசியில் கட்டியதோ மாட்டிற்கும் சேர்த்து எட்டு அறைகள் கொண்ட மெத்தைவீடு. 1986-87ல் கட்டப்பட்ட வீட்டிற்கு ஆன செலவு ரூபாய் 84,000 இன்றைய மதிப்பு சுமார் 8,00,000. இருட்டு கூரையில் அடுப்பு வெளிச்சத்திலும், மண்ணென்னை விளக்கின் வெளிச்சத்திலும் படித்த காலம் மாறி சட்டென மின்சார ஒளி வந்தது.

முன்னேற்றம்......

நான் எவ்வளவு உழைத்தேனோ அதற்கு ஏற்றவாறு ஒரு சிந்தனையாளனாகவே வளர்ந்துள்ளேன்। என் தந்தை என்னை தோள்மேல் வைத்துக்கொண்டு மாடு மேய்த்த காலத்திலிருந்தே ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை கேட்டு வளர்ந்தேன். எனக்கு விடை கிடைக்வில்லையே என்பதற்காக நான் கேள்வியை விட்டுவிடவில்லை ஏதோ ஒரு நினைவு மூளையில் தான் புதைக்கிறேன், மீண்டும் அந்த கேள்விக்கு விடைகானும் வரை என் தேடல் தொடரும், விடை கிடைத்த போதெல்லாம் ஒரு துனை கேள்வியோ, சந்தேகமோ தான் மிஞ்சியது, இந்த கேள்வியும் அதற்கான தேடலுமே எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திகொடுத்துள்ளது. ஓர் ஐயர் வீட்டில் பால் கொடுத்து வந்தோம், ஆரம்பத்தில் வெளியே நிறுத்தி பால் வாங்கியவர்கள் பின் நான் எங்கள் கிணற்றில் மீன் பிடிப்பதை தெரிந்து அவர்கள் தொட்டியில் விட மீன் கேட்டார்கள். பின் நான் ஒரு துரு துரு ஆசாமி என்பதால் முருங்கைகாய் பறிக்கச்சொல்வது என்று சின்ன சின்ன வேலை சொன்னவர்களின் வீட்டின் அடுப்பறை வரை செல்லும் அளவிற்கு அனுமதிக்கப்பட்டேன். அவர்கள் குழந்தைகளை எடுத்து விளையாடுவது என்று எனக்கு அவர்கள் வீட்டில் எந்த தடையும் இருந்ததில்லை, ஆனால் நான் கல்லூரியில் படிக்கும்போது அதுவும் கணிப்பான் படிப்பதெல்லாம் பி.காம், சி.ஏ படித்து அசிஸ்டெண்ட் அக்கவுண்ட்ஸ் ஆபிசராக வேலை பார்த்த அவர்களின் மகனுக்கே தெரியாது என்பதால் என்னை சற்று பொறாமையுடன் பார்ப்பது எனக்கு கொஞ்சம் பெருமிதமாகவும், சற்று சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிவிடும் அவசரத்தையும் ஏற்படுத்தும்.

புலிகளைப்பற்றிய முதல் அறிவு................

ஒரு பொங்கலின் போது என் அத்தையுடன் சாமி கும்பிட போய்விட்டேன் என்பதற்காக 4 வயதில் நான் வாங்கிய அடி இன்றும் என் பாட்டி வீட்டுப்பக்கமே போவதில்லை, அன்று வாங்கிய அடியால் வந்த புன்களில் மொக்கும் ஈக்களை ஓட்டவே எனக்கு பள்ளிக்கூடத்தில் நேரம் சரியாக இருந்த்து. சற்று கவனக்குறைவாக இருந்தால் ஈக்கள் புன்னை குடையும் வலி இருக்கிறதே அது அனுபவித்தால் தான் தெரியும், என்னதான் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் உயிரை வாங்கும். வருடத்தின் 365 நாளும் கால் கைகளில் புன் இல்லாத நாளே இல்லை. ஏழாம் வகுப்பு வரை நடத்த அந்த பள்ளிக்கு அனுமதியில்லை, ஆனால் நடத்திக்கொண்டு இருந்தார்கள். ஒரு வழியாக ஏழாம் வகுப்பு முடித்தவுடன் 8 ம் வகுப்பு மேட்டூர் அரசினர் மேல்நலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டேன். நான் அறிந்திருக்காத குதிரை ஜில்லி, அது இது ஏதேதோ விளையாட்டுக்களை அங்கு விளையாடுவதுதான் வேலை, படிப்பு என்பதெல்லாம் எப்போதாவது நடக்கும் விசயம். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தாலும் ஏனோ அந்தப் பள்ளிக்கூடம் எனக்கு பிடித்திருக்கவில்லை. மிகவும் கண்டிப்பான உடற்கல்வி ஆசிரியர்கள், மேலும் அங்கு தரையில் அமர்ந்துதான் படிக்கவேண்டும். அழுக்கான தரையில் அமர்வதால் அடிக்கடி உட்காரும் இடத்தில் வேர்வையால் அரிக்க ஆரம்பித்துவிடும் இதுவே பெரிய எரிச்சலாக இருக்கும். அதுவரை அதிகம் மண்ணில் விளையாடி பழகாதவன் அந்த பள்ளியில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் பேருந்தில் நக்கீரன் படித்துக்கொண்டிருந்த ஒருவரிடம் முதல்முறையாக ஆர்வத்துடன் ஆவலுடன் வாங்கி படித்தேன் அதுவரை நாளிதழோ, வார இதழ்களையோ படித்ததே இல்லை. ஒரே ஒரு முறை 1984ல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது ஒரு தினத்தந்தியை படிக்கச்சொல்லி கொடுத்தார்கள். 1989 ம் ஆண்டு அந்த நக்கீரனில் வெளியாகி இருந்த விடுதலைப்புலிகளின் ஈழ விடுதலை போராட்டம் சம்பந்தமான ஒரு கட்டுரையை படித்தவனுக்கு அப்போது வரலாற்று ரீதியாக அவ்வள்வு அறிவு இல்லாவிட்டாலும் அவர்கள் கொடுமைக்கு எதிராக ஆயுதமேந்திய போராளிகள் என்பதை புரிந்துகொண்டேன். அப்போது தான் இலங்கை என்ற நாட்டிலும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பது எனக்கு தெரியவந்தது. அடுத்த நாள் என் பள்ளிக்கு வெளியே உள்ள கடையில் சைக்கிளில் ஒட்டப்படும் பாயும் புலி படம் ஒன்றை 50 பைசாவிற்கு வாங்கி எனது வரைகருவி பெட்டி(Geometry Box)ல் ஒட்டினேன். அது முதல் எனக்குள் எதோ ஒரு புதிய இரத்தம் பாய்ந்துவிட்டது போல் ஒரு உணர்வு, நான் பல்கலைகழகத்தில் படித்து முடித்த நிலையில் கூட அந்த வரைகருவி பெட்டியை பத்திரமாக வைத்திருந்தேன் ஆனால் சமீபத்தில் கானாமல் போய்விட்டது. விசாரித்ததில் என் தம்பி தன் 6ம் வகுப்பு காதலிக்கு பரிசாக கொடுத்துவிட்டானாம். நான் 6ம் வகுப்பில் படிக்கும்போது காதல் என்ற வார்த்தையையே கேள்விபட்டதில்லை. லவ்வு, கூட்டிக்கிட்டு ஓடிபோயிருச்சிங்களாம் என்றுதான் ஊரில் பேசுவார்கள், அப்போதுஅது எனக்கும் எதோ கொலைகுற்றம் போலத்தான் தோன்றியது. அதற்கு முன் 1987 ல் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக பரவிய வதந்தியால் கண்டன வாசகங்கள் தாரில் பேருந்துகளில் எழுதியிருந்ததை படித்து யாரிந்த பிரபாகரன் என்று புரியாமல் தினம் தினம் அதை எல்லா பேருந்திலும் படித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அதே பேருந்துகளில் "பிரபாகரன் கொல்லப்படவில்லை, பிரபாகரன் வாழ்க" என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததை புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். 8 ம் வகுப்பு படிக்கும்போது மேட்டூரில் கானப்படும் பெரியாரின் பொன்மொழிகளால் நான் அவ்வள்வாக ஈர்க்கப்படவில்லை, காரணம் பள்ளிக்கூடம் முடிந்ததும் உடனே வீடு வந்துவிடவேண்டும் என்பது பெற்றோர் உத்தரவு.
நாத்திகவாதி......................

8ம் வகுப்பு முடித்தவுடன் 9ம் வகுப்பிற்கு மேட்டூர் ஆர்। எஸ் பகுதியிலுள்ள வைதீஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்க்கப்பட்டேன்। கொஞ்சம் கட்டுப்பாடு நிறைந்த பார்ப்பன நிருவாகம் காரணம் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிருவனம் நடத்தும் பள்ளி, ஆசிரியர்களுக்கு மட்டும் அரசு சம்பளம்। நான் ஒன்றும் பெரிய படிப்பாளி அல்ல। பள்ளிப்பருவத்தில் நான் ஒரு சராசரி மாணவன் தான்। இந்த காலத்தில் தான் ஆர். எஸ் பகுதியில் இரயில்வே காலணி சுவற்றில் கானப்படும் பகுத்தறிவு பிரச்சார கேள்விகளை எனக்குள் கேட்டுக்கொண்டேன். 10ம் வகுப்பு படிக்கும்போது அவ்வப்போது சாமி கும்பிடுவதும் சில நேரம் கடவுள் இல்லையோ என்று மாறி மாறி தடுமாற்றம் இருந்தது. மதிப்பென் வாங்கவேண்டும் என்ற எண்ணம்தான் அப்போது கடவுளிடம் வேண்டுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. அதே ஆண்டில் எனக்கு அம்மை நோய் வந்துவிட எனக்காக என் பெற்றோர் வேண்டிக்கொண்டதாகவும் அதற்காக நான் கரகம் எடுக்கவேண்டும் என்று கூரினர். இதற்காக நான் வேட்டியணிந்து மேலே ஒரு பணியனுடனும் தலையில் பூங்கரகத்துடனும் தெப்பக்குளத்திலிருந்து கூட்டத்தோடு கூட்டமாக வந்தவனுக்கு ஏகப்பட்ட வெட்கம் இப்படி நான் இந்த கரகத்தை சுமந்துகொண்டும் கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வியுடனேயே வந்துகொண்டிருந்தேன், நான் அப்போது திட்டிப்பார்க்கலாம் என்ன ஆகுமென்று என்பதற்க்காக மாரியாத்தாளை நான் திட்டயதெல்லாம் நான் இங்கு எழுத முடியாது. ஆனால் எது எப்படியோ என் சித்தி வீட்டு வழியாக நான் செல்லும்போது உறவினர்கள் வந்து பணம் குத்துவார்கள் பாருங்கள் அதற்காகவே மீண்டும் மீண்டும் கரகம் எடுக்கலாம், இப்படி இரண்டு வருடம் எடுத்தவன் மூண்றாம் வருடம் எடுக்க மறுத்துவிட்டேன். அதன் பிறகு கோயிலுக்கு போவதில்லை, வீட்டிலும் சாமி கும்பிடுவதில்லை. என்னை பல கல்யாணங்களுக்கு பெற்றோர் அழைத்தும் என் மாமன்மார்களின் திருமணத்திற்குகூட போனதில்லை, இந்த சடங்கு எழவெல்லாம் பொறுத்திருந்து பார்க்க பொறுமையில்லை என்பதும் ஓர் காரணம். நான் 12ம் படிக்கும்போது மார்கழி மாதத்தில் போடப்படும் ஐயப்பன் பக்தி பாடல்கள் ஏற்படுத்திய எரிச்சலும், கல்லூரி செல்லும் வழியில் பேருந்து செல்வதற்கு இடையூறாக நடத்தப்பட்ட கோயில் திருவிழாக்களும் இந்த சிரமங்கள் எதற்காக என்ற கேள்வி என்னை உறுத்திக்கொண்ட நேரத்தில் என்னோடு பேருந்தில் வரும் ஒரு கல்லூரி தோழன் ஏதோ விவாதத்தில் கல்யாணத்திற்கு எதற்கு தாலி என்றான். எனக்குள் இவன் பேசுவது குதர்கமாக தெரிந்தாலும் நியாயமாக தெரிந்தது. ஆனால் இதை யார் ஒப்புக்கொள்வார்கள் என்று வாதிட்டேன். இதே வாதத்தை எங்கள் சித்தி வீட்டில் நடந்த ஒரு விசேசத்தில் என் உறவினர்களிடம் வைத்து நான் தாலிகட்டப்போவதில்லை, என்றும் சாமியெல்லாம் ஒரு கல், கல்யாணத்திற்கு ஒரு ஐயர் தேவையில்லை, அவனுக்கு எதற்கு அரிசி, பழம், தேங்காய், என்று என நான் வைத்த வாதம் அவர்களை மாற்றிவிடவில்லை ஆனால் நான் ஒரு உருப்படாதவன் என்ற முத்திரை குத்தப்பட்டது. இந்த பையன் என்ன இப்படி பேசிகிட்டு திரியிறான் என்ற கேள்வி என் உறவினர்கள் மத்தியில் இருந்தாலும் நான் ஒரு புத்திசாலி என்ற எண்ணம் இருந்தது, விளையாட்டிற்காகவே என்னை சீண்டி வேடிக்கை பார்ப்பதும், நான் பேசும் சமுதாய கருத்துகளை அவர்கள் ரசிப்பதும் அண்றாட நிகழ்வுவாகிப்போனது. 12ம் வகுப்பில் ஓரளவு மதிப்பென் பெற்ற எனக்கு நான் விண்ணப்பித்த நாண்கு கல்லூரிகளிலுமே இடம் கிடைத்தது. அதில் நான் தேர்ந்தெடுத்த கல்லூரிதான் ஈரோடு வாசவி கல்லூரி. நான் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் என் தன்நம்பிக்கையை வெகுவாக உயர்த்தியது.


சமுதாயப்பார்வை..................

எனக்கு சமுதாயத்தின் மீது முதலில் பற்று ஏற்பட ஒரு சாதியியக்கம் தான் என்று கூறினால் பலருக்கும் மாறுபட்ட கருத்து வரலாம் அல்லது என்னை ஒரு சாதி உணர்வாளனாககூட பார்க்கலாம், ஆனால் எனக்கு சமுதாய உணர்வு ஏற்பட இதுவே காரணம், 1985-86ம் ஆண்டுகளாக இருக்கலாம் தமிழகமெங்கும் ஒரு குறிப்பிட்ட சாதியின் உரிமைக்காக ஒரு சங்கம் தொடங்கப்பட்டு பெருமளவில் எழுச்சி கானப்பட்டது, ஒரு வாரம் பந்தெல்லாம் நடந்து இட ஒதுக்கீட்டுக்காக போராடினார்கள். எனக்கு அப்போதிருந்த அறிவிற்கும் மனப்பக்குவத்திற்கும் அந்த உணர்வு நியாயமாகபட்டது. ஆனால் பின்னாளில் தமிழ்தேசிய, பெரியாரிய இயக்கங்களால் கவரப்பட்ட நேரத்தில் நான் ஒரு உண்மையான சாதி மறுப்பாளானாகவே இருந்து வருகிறேன். இன்றும் அதே சாதியியக்கம் தொடங்கிய தலைவர் சமுதாய கருத்துக்களை வைப்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் நியாயமான கருத்துக்கள் என்று நம்புகிறேன். ஆனால் அதற்காக அவர் அன்று பேசிய வசனங்களில் இருந்து தன் அரசியல் கட்சியை எப்படியெல்லாம் மாற்றி நடத்துகிறார் என்பதை அறியாதவனல்ல அதே சமயம் நியாயமான கருத்துகளை யார் பேசினாலும் ஆதரிப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

கல்லூரி பயணம்...................

ஈரோடு வாசவி கல்லூரிக்கு வீட்டிலிருந்து தினமும் சுமார் 3.30 மனி நேரம் பயனித்துக்கொண்டிருந்தேன். மேட்டூர்-ஈரோடு சாலையின் இடதுபுறம் காவேரி எங்களோடு ஓடி வருவாள் ஆற்ற்ங்கரைக்கும் சாலைக்குமிடையே பசுமையான நெல்வயல்கள், சாலையின் வலதுபுறம் தொடர்ச்சியான மலைகள், மலைக்கும் சாலைக்கும் இடையே நெல்வயல்களின் பசுமை மணைதை தாலாட்டும். மழைக்காலங்களில் மலைகளின் மீதிருந்து இரண்டுமூண்று இடங்களில் சிறு ஊற்றுக்கள் அருவியாய் கொட்டும். திருமகள் பேருந்தில் வாசவி கல்லூரி மாணவர்கள் தான். நண்பர்கள் கூட்டத்துடன் குதுகலமாய் இன்னிசை பாடலகளை ரசித்துக்கொண்டே சிலுசிலுவென வயல்வெளி காற்றில் பறப்பதுபோல் பறந்தது மூண்று ஆண்டுகள். வாழ்வின் மிக பசுமையான காலம், சில நேரம் வாழ்வின் பொற்காலத்தை எப்படி வீணடித்திருக்கிறோம் என்று தோன்றும். ஏழு ஆண்டுகளுக்கு பின் மேட்டூரை சேர்ந்த ஒருவன் கல்லூரி மாணவர் தலைவனான். அவனுக்கு நண்பர்கள் விதித்த ஒரே நிபந்தனை வாரம் ஒரு ஸ்டரைக் நடத்தவேண்டும். கல்லூரி தேர்தல் நட்க்கும் விதம் என்னை முதலில் வியப்பில் ஆழ்த்தியது. ஒரே நோட்டீஸ் மயம், பட்டாசுகள், ஆள் கடத்தல், கத்திக்குத்து, வேட்பாளரின் பெற்றோரை கடத்தி மிரட்டுதல், அடியாட்களுடன் ஒவ்வொரு வேட்பாளரும் 40 முதல் 50 கார்களின் அனிவகுப்பு, அரசியல்கட்சிகளின் பின்னனி என கல்லூரியே விழாக்கோலமும் ஆட்டமுமாக இருக்கும். பெரும்பாலான வெள்ளிக்கிழமைகள் ஸ்டரைக்தான். சில நேரங்களில் எதிர்பாராமல் வாரத்தின் முதல் நாளே ஸ்டரைக் நடக்கும். சுமார் 2 மனி நேரம் பயணித்து வந்தால் விசில் சத்தம் விண்ணை பிளக்கும். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை-47 ல் ஒரே சமயத்தில் நாண்கு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பேருந்துகள் நடுரோட்டில் நிறுத்தப்படும். மிக விருவிருப்பான அந்த சாலையின் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு மக்கள் வேதனையோடு தவிப்பதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக பேருந்துகளில் இருந்த பெண்களை சைட் அடிப்பதிலேயே முணைப்புகாட்டுவது. உள்ளூர் அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுப்பதில்லை மீறினால் கூட்டமாக சேர்ந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் தாக்குவது. சில சமயம் அவர்கள் லிவராலும் மற்ற ஆயுதங்களாலும் டிப்போவிற்குள் வைத்து தாக்கிய கதையும் நடந்துள்ளது. கல்லூரியின் பின்புறம் உள்ள காட்டில் கில்லி விளையாடுவது. அருகிலுள்ள ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி மாணவர்களை ராகிங் செய்வது, இப்படி ஏகப்பட்ட அக்கிரமங்கள் நடக்கும் கல்லூரியில் மாணவர் சங்க தலலவராகி பின்னாளில் தமிழக அமைச்சரானவர்தான் சு.முத்துசாமி. தேர்தலுக்கு முன் ஒருநாள் முடிந்தவரை ஆட்களை ஏற்றிக்கொண்டு ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்திலோ, பெரிய ஹாலிலோ நீலப்படம் காட்டுவது, குறைந்த விலை மதுபாணங்களை அதிக அளவில் வினியோகிப்பது, பிரியாணி, பணம் என எல்லா தேர்தல் சமய வேலைகளும் கல்லூரியிலேயே ஆரம்பித்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், சிலர் பலான பலான உல்லாசத்திற்கு போவதும் உண்டாம். இதற்கெல்லாம் மகன் ஆளாகிவிடகூடாது என்பதற்காக ஹாஸ்டலில் தங்க நான் அனுமதிக்கப்படவில்லை. என் கல்லூரி காலத்தில் எந்த பெண்ணிடமும் பேசியதே இல்லை என்பதுதான் என் கல்லூரி வாழ்விலேயே வருத்தமான செய்தி. ஆனால் ஸ்டரைக் நாட்களில் லாரி பிடித்து குமாரப்பாளையத்தில் உள்ள கௌரி தியேட்டரிலோ, ஈரோடு நடராஜாவிலோ 'A' படம் பார்த்ததும் அங்கேயும் எங்கள் நண்பன் ஒருவன் படத்தை பார்க்காமல் நாங்கள் வாசவி காலேஜ் கம்பியூட்டர் சையிண்ஸ் ஸ்டூடண்ட்ஸ் என்று பெருமைபட மாணத்தை வாங்கியதும், ஒருவன் பல சந்தேகங்களை கிளப்பி எந்த விவரமும் அறியாத மற்ற எல்லோரையும் நச்சரித்ததும் மறக்கமுடியாதது. அவனுக்கும் எங்களுக்கும் கடைசி வரை புரியாமல் இருந்த கேள்வி இதுதான் என்னடா அங்க ஒன்னுமே தெரியல என்பதுதான் யாருக்கு தெரியும்? ஒருவழியாக வேர்த்து வியர்த்து வெளியே வந்து அவரவர் வீட்டிற்கு நல்லபிள்ளைகளாய் போய்கொண்டிருந்தோம். தேர்தல் சமயத்தில் ஆர்வக்கோளாரில் முதல்முறையாக இரண்டு குவாட்டர்களை ராவாக கவுத்தது தெரியாமல் உள்ளே போனதும், அன்று அணிந்திருந்த புதிய உடையுடன் ரோட்டோரமாய் கிடந்ததும் தான் பின்னர் என் டைரிகுறிப்பில் என் சகோதரிகள் படித்துவிட்டனர். வாழைமட்டையை காதில் பிழிந்துவிட்டும் சோடாவால் முகத்தை கழுவியதும் பேருந்தில் என்னை தூக்கிப்போட்டது, மக்கள் அதை வேடிக்கை பார்த்ததும் நான் என்னையே கேவலமான நிலையில் பார்த்தது. அன்று யார் யார் என்னென்ன சொல்லி திட்டினார்களோ. ஆனால் இப்படி ரோட்டோரமாய் கிடந்ததிலும் ஒரு சுகமும் பருத்திவீரன் போல ஒரு வரட்டு பெருமையும் இருந்தது. அப்படியெல்லாம் இன்று கிடக்கமுடியாதே.

கல்லூரியிலிருந்து பல்கலைகழகம்.............

கல்லூரி நாட்களை நினைத்து சந்தோசப்பட ஏராளமான விசயங்கள் உண்டு, நான் காலங்கடந்துதான் மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க தொடங்கினேன். முதலில் அழகப்பா பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்தேன். அதோடு என்னுடைய கல்லூரி நண்பர்கள் நாண்கு பேரையும் அழகப்பா பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிக்க சொன்னேன். மேலும் வெங்கடேஸ்வரா பல்கலைகழத்தில் நடந்த ஆந்திர பொது தேர்விற்காக திருப்பதிக்கு போனேன். கடைசி வரை போகலாமா வேண்டாமா? என்ற கேள்வியிலேயே இருந்தவன் திடீரென கிளம்பிவிட்டேன். அதுவரை அவ்வள்வு தொலைவு தனியாக பயனித்தது இல்லை. திருப்பதி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது. சேலத்தில் வந்து திருப்பதி பேருந்தில் இடம் கிடைப்பதில் சிரமம் இருந்தது. நடத்துனர் பயனச்சீட்டின் விலைக்கு மேல் தரவேண்டுமென்றார் வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். பயனச்சிட்டை வாங்கிகொண்டு உள்ள அமர்ந்தவனிடம் அதிக தொகையை கேட்க 10 ரூபாய் கொடுத்தேன், அவரோ 20 ரூபாய் கேட்டார், பத்து ரூபாய்க்குமேல் கொடுக்கமுடியாது என்று கூற அவர் பத்து ரூபாயையும் திருப்பி கொடுத்துவிட்டார். சரியாக 9.15 மனிக்கு வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் எனக்கான தேர்வு அறையில் நுழைந்தேன். பல் விலக்கவும் இல்லை குளிக்கவும் இல்லை, தேர்வில் அகில இந்திய அளவில் 8300 தாண்டி ஏதோ ஒரு ராங்க் கிடைத்தது. எந்த தயார் நிலையும் இல்லாமலே இந்த ராங்க் கிடைத்தது. எனது சீனியர் ஒருவர் பல்கலைகழகத்தில் இடம் பிடித்திருந்தார், கோயமுத்தூரில் அந்நாளில் சிறந்த கல்லூரியாக கருதப்பட்ட பி.எஸ்.ஜியிலும் ஒருவர் சேர்ந்திருந்தார். எனவே இந்த இந்த இரு கல்விக்கூடங்களுக்கும் விண்ணப்பித்தேன். அழகப்பா பல்கலைகழத்தின் நுழைவு தேர்விற்கு நாண்கு பேரும் ஒன்றாக தேர்வெழுத சென்றோம், மதியம் திருச்சியில் அளவிற்கு அதிகமாக உணவருந்திவிட்டு காரைக்குடி நோக்கி பயணித்தோம். எனக்கு திருச்சியே முதல்முறை, காரைக்குடியில் ஒரு லாட்ஜில் அனைவருக்கும் 50 ரூபாய் வாடகை என்று தங்கினோம். முதலிலே பல்கலைகழத்தை பார்த்துவிட வேண்டுமென சுமார் 7.00 மணிக்கு பல்கலைகழத்திற்கு சென்றோம். இரவின் மின்னொளியில் பல்கலைகழகத்தின் நிருவாக கட்டிடத்தைப் பார்த்து படித்தால் இங்கு படிக்கவேண்டும் என்று எனக்குள் ஒரு எண்ணத்தோடு ஆனால் பல்கலைகழகத்தில் ஒரு சராசரி எப்படி இடம் பிடிப்பது என்று ஒரு கேள்வியும் வந்தது. அடுத்த நாள் எனக்கு இரண்டு நுழைவு தேர்வுகள் இரண்டு தேர்வையும் எழுதிய பின்னர் ஒரு நம்பிக்கை இருந்தது, நாமும் இங்கே சேர வாய்ப்பு இருக்கிறது என்று. அன்று மற்ற அனைவரும் பிள்ளையார் பட்டிக்கு போயிருந்தார்கள். அனால் நான் அடுத்த நாள் தேர்விற்கு தயாரானேன், விடிய விடிய கொசுக்கடி, விடிந்தால் லாட்ஜ் ஓனரிடம் ஏதோ சண்டை வந்துவிட அனைவரும் காலி செய்துவிட்டோம், மற்ற மூவரும் உடனே ஊருக்கு கிளம்பிவிட, சற்று வருத்தத்துடன் தேர்விற்கு போனவனுக்கு நல்ல தூக்கம். ஆனால் திருப்தியாகவே விடைகளை எழுதிவிட்டு தனியாக ஊருக்கு திரும்பினேன். அன்றிரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டேன். முதன்முறையாக பாரதியார் பல்கலைகழகத்திற்கு சென்றவனுக்கு கோவையின் மக்கள் வித்தியாசமாக தெரிந்தார்கள். ஊரே வித்தியாசமாக இருந்தது. சிலுசிலுவென குளிர்ந்தகாற்று, இனிக்கும் சிறுவாணி தண்ணீர், சற்று வெந்நிறமான மக்கள், கொஞ்சம் சுகமாக வாழ்பவர்கள் போல் அலட்டிக்கொள்ளாத ஊராக இருந்தது. பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவனை இயற்கை எழில் கொஞ்சும் மருதமலையும் பல்கலைகழகத்தின் தோற்றமும் நமக்குள் ஒரு கம்பீரத்தை கொடுத்தது. அங்கே உள்ளிருந்து வெளியே இனையாக வந்த மாணவ கூட்டம் பேசிய ஆங்கிலம் சட்டென தம்பி நீ இங்க படிக்கிறதெல்லாம் கஷ்டம்பா என்பதுபோல் இருந்தது. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் ஒரு விண்ணப்பத்தை வாங்கிவிடுவோம் என்றால், வங்கிக்கும் பதிவாளர் அலுவலகத்திற்கும் நடந்து அலுத்துவிட்டது. ஒருவழியாக விண்ணப்பத்தை வாங்கியாகிவிட்டது. உள்ளே இருப்பவர்கள் எல்லாம் பெரிய அறிவு ஜீவிகளாக இருப்பார்கள் என்று பயந்தவனுக்கு அப்படி ஒன்றும் மிரட்டும் விதமாக இல்லை. இதற்கிடையே அழகப்பா பல்கலைகழகத்தில் இரண்டு நேர்முக தேர்விற்கான அழைப்புகள் வெவ்வேரு தேதிகளில் வந்தது. இரண்டு நேர்முக தேர்விலும் கலந்துகொண்டவனுக்கு நிச்சயம் ஏதாவது ஒன்றில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை பிறந்தது.
சவால்கள்................

கல்லூரி இறுதி முடிவில் எனக்கு பெரிய் இடி விழுந்தது। தேர்வுகளில் தேறிவிட்டேன் ஆனால் நான் வாங்கிய சராசரி சதவிகிதமோ 59।8%। தமிழ்நாட்டிலுள்ள எந்த பல்கலைகழகத்தில் சேரவும் 60% தேவை। 0।2% என் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று நான் நினைக்கவில்லை। இதற்கிடையே அழக்கப்பா பல்கலைகழகத்திலிருந்து எம்।எஸ்.சி க்கான சேர்க்கை அழைப்பு பறந்து வந்தது. ஆனால் 15 அவகாசம் இருந்தது. அதற்குள் ஏதாவது செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வீட்டிலோ ஒரே அழுகையும் கேள்விக்குறியாகவும் சோகமும் நிலவியது. யாருக்கும் உறக்கமில்லை. என் தந்தையுடன் வேலை செய்யும் ஒரு கெமிஸ்ட் வீட்டிற்கு அழைத்துச்சென்றார் ஆனால் அவரோ இதற்கென்ன செய்யமுடியும் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும் அவரிடம் விசயம் இருப்பது அறிந்துதான் அவரை அனுகினோம். இறுதியாக மனிதர் தனது செல்வாக்கை ஓரளவு பயன்படுத்த ஒப்புக்கொண்டார். அவருக்கு அப்போது பாரதியார் பல்கலைகழத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான திரு. தண்டபானியையும் அழகப்பா பல்கலைகழகத்தின் இயற்பியல் துறைத்தலைவரையும் நன்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். ஆனால் அவர் என் விவகரத்தில் எதையும் வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ முடியாது. அவர்களை சந்திக்க மட்டும் ஒரு அறிமுக கடிதம் கொடுப்பதாக கூறினார். அடுத்த நாள் தருவதாக கூறியவரிடம் கால நேரம் குறைவாக இருப்பதை எடுத்துரைத்து உடனே அறிமுக கடிதத்தை பெற்றுக்கொண்டோம். ஆனால் இப்போது யாரை முதலில் சந்திப்பது என்பதில் எனக்குள் ஒரு மணப்போராட்டம். இறுதியாக மார்க் விசயத்தை முதலில் கவனிப்பதுதான் முழுமையான தீர்வு என தீர்மாணித்துக்கொண்டு பாரதியார் பல்கலைகழகம் புறப்பட்டேன். கொள்ளைக்கு போனாலும் கூட்டாவாது என்பார்கள் ஆனால் நானோ என்னொடு படித்த இன்னொரு நண்பனுக்கும் இதே பிரச்சனை, அவனையும் நான் அழைத்தது அன்றைய தினத்தில் பெரிய தலைவலியானது. அவனுக்கு பல்கலைகழத்தில் படிக்கும் ஆர்வமில்லை, ஏற்கனவே ஏதோ ஒரு கல்லூரியில் பணம் கொடுத்து சீட் வாங்கியிருந்தவனை நான் வற்புறுத்தி அழைத்து சென்றேன். அன்று பல்கலைகழத்தை அடைந்த போது அலுவலக நேரம் கடந்துவிட்டது. சலிப்புடன் 150 கிலோமீட்டர் பயனித்து வீடு வந்து சேர்ந்து மீண்டும் அடுத்த நாள் 150 கி.மீ பயணித்து பல்கலைகழகத்தில் கண்ட்ரோலரை நெடுநேரம் காத்திருந்து சந்தித்தோம். அறிமுக கடிதத்தை படித்துவிட்டு என் பிரச்சனையை கவணமாக கேட்டவர், இந்த பிரச்சனைக்கு தான் சலுகையாக ஏதும் செய்யத்தேவையில்லை, பல்கலைகழக நடைமுறையிலேயே இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது என்ற பொன்னான வார்த்தைகளை உதிர்த்தார்.நாம் சில முற்றுபெற்றுவிட்டதாக நினைக்கும் விசயங்கள்கூட சில நேரங்களில் முயற்சி செய்தால் வெற்றியின் பாதை தெரியும். அவரிடம் அதற்கான நடைமுறைகளை தெரிந்துகொண்டோம். இந்த கருணை அடிப்படையில் மதிப்பென் கோருவது என்னைப்போல இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர் மொத்த மதிப்பென் தேவை 10 மிகாமலும் இதற்கு முந்தைய தேர்வுகளில் தேர்ச்சிக்காக இப்படி கருணை அடிப்படையில் பரிசீலிக்கப்படாதவராக இருக்கவேண்டும். அதாவது சில நேரங்களில் 35 மதிப்பென் தேவைப்படும் இடத்தில் 34 மதிப்பென் வாங்கியிருந்தாலும் கருணை அடிப்படையில் சிலருக்கு 35 மதிப்பென் கொடுக்கப்படுவது உண்டு. மேலும் என் கல்லூரியில் உள்ள துறைத்தலைவரும், முதல்வரும் இதற்காக பருந்துரைக்க வேண்டும். அப்படி பரிந்துரைத்தால் அது பல்கலைகழகத்தின் துனைவேந்தர் மற்றும் சிண்டிகேட்டின் பரிசீலனைக்கு அனுப்பபட்டு அங்கே ஏற்க்கப்பட்டால் இந்த கருணை மனு சாதகமாக அமையலாம் என்று கூறினார். உடனே அவரிடம் அதற்கான படிவங்களை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினேன். அன்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த திரு. தண்டபானி இந்த விளக்கத்தை சொல்லியிருக்காவிட்டால் நான் பல்கலைகழகத்தில் படித்திருக்கமுடியாது. அடுத்த நாள் நான் மட்டும் எனது துறைத்தலைவர் திரு. நடராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து விளக்கினேன், அவருக்கு சந்தோசத்திற்கு அளவில்லை, உடனடியாக பரிந்துரை மனுவில் உரிய விவரங்களுடன் கையெழுத்திட்டு கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு கல்லூரி முதல்வர் திரு. சிவகுமாரை என் நண்பன் ஒருவனுடன் அவரது இல்லத்தில் சந்தித்தேன் அவரும் இதுபோல் ஒரு வசதி உள்ளதா என்று ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு, உன்னால் நம்ம கல்லூரி பசங்களுக்கு இனி எதிர்காலத்தில் இதுபோல ஒரு காரியத்தை எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று என்னை பாராட்டியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கல்லூரியில் சேரும் போது அவரிடம் பேசியது அதன் பிறகு அவரிடம் பேசியதில்லை, இப்படி மாணவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளும் முதல்வரை நாங்கள் எவ்வள்வு மன வேதனைக்கு ஆளாக்கியிருப்போம் என்று தோன்றியது. துறைத்தலைவர் மற்றும் முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன் எனது இறுதி தேர்வு மதிப்பென் பட்டியலுடன் கோவைக்கு பயணமானோம். என்னுடன் வந்த வகுப்பு தோழன் அவனுடைய மதிப்பென் பட்டியலை கொண்டு வரவில்லை. இதுவரை ஒரு நாள் மட்டுமே என்னுடன் வந்த அவனுக்கும் சேர்த்துதான் எல்லோரிடமும் கையெழுத்து வாங்கியுள்ளேன். ஆனால் இவன் மதிப்பென் கொண்டுவரவில்லை. அவனுக்கு முதல் வகுப்பு பெற 8 மதிப்பென் தேவை, எனக்கு 6 மதிப்பென் தேவை. கடைசியாக தேர்வு கட்டுப்பாட்டு மையத்தில் அவனுடைய மதிப்பென் பட்டியலும் இனைத்தால் தான் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவர்களை கெஞ்சி கூத்தாடி மறுநாள் கொடுத்துவிடுவதாக கூறி மனுவை ஒப்படைத்தோம். இப்போது இவன் பட்டியலை கொடுக்காவிட்டால் என் பட்டியல் குப்பைக்கு போய்விடுமே. ஆனால் அவன் மூன்று நாள் கழித்துதான் பட்டியலை சமர்ப்பித்து இருந்தான். இதற்கிடையே அழகப்பா பல்கலைகழத்தின் இயற்பியல்துறை தலைவரை பல்கலைகழகத்தில் சேரப்போகும் நாளன்று சென்று பார்த்தேன். அவர் எனக்கும் அழகப்பா பல்கலைகழகத்தின் கணினித்துறை தலைவர் சக்திவேலுடன் நமக்கு ஆகாது ஆனால் வேறு நண்பர் மூலம் தொலைபேசியில் பேச சொல்கிறேன் என்றார். எனக்கு எனோ நம்பிக்கையில்லை. ஆனால் துறைத்தலைவர் சக்திவேலிடம் என் எதிரேலேயே பேசப்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட மதிப்பென் பட்டியலை ஒரு மாதத்திற்குள் ஒப்படைக்காவிட்டால் தாமாகவே பல்கலைகழகத்திலிருந்து விலகிகொள்வதாக எழுதி வாங்கிகொண்டு மாணவர் சேர்ப்பு ஆவனத்தில் கையெழுத்திட்டார். ஒட்டுமொத்தமாக பலருடைய கருணையும் ஆதரவும் இந்த விவகாரத்தில் பக்கபலமாக இருந்ததே இந்த வெற்றிக்கு காரணம். கவலைகள் மறந்து மகனை பல்கலைகழகத்தில் சேர்த்துவிட்ட பெருமிதம் கானப்பட்டது. இருந்தாலும் எல்லோரிடமும் ஓர் அச்ச உணர்வு இருந்தது. ஆனால் அதையும் தாண்டி ஓர் நம்பிக்கையுடன் பல்கலைகழக விடுதியில் சேர்ந்தேன்.

கோமாளி.............................

காரைக்குடி ஒரு பாலனைவணத்தை போல வெயில் சுட்டெரிக்கும் பிரதேசம்। இலங்கை அரசு தொலைகாட்சியான ரூபவாகினியின் ஒலிபரப்பு அங்கே தெரியும். ஒரு மதியம் விடுதி தொலைபேசிக்கு அழைப்பு வந்தது, முதலில் எடுத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் அழைப்பு, எதிர்முனையில் பேசிய பெண் நீங்கள் என்றார், நானோ நீங்கள் யார் என்றதும் அதற்கு பதிலேதும் பேசாமல் சார் நீங்க வாட்ச் கட்டியிருக்கீங்கல என்று கேட்டாள். தற்போது கட்டியிருக்கவில்லை ஆனால் கட்டும் வழக்கம் உண்டு என்றேன், சார் ப்ளீஸ் கொஞ்சம் டைம் என்னன்னு சொல்லுங்க என்றார். இல்லைங்க பக்கத்துல யாருமில்லை என்றேன், மீண்டும் சார் ப்ளீஸ் கொஞ்சம் அர்ஜண்ட் சீக்கிரம் பார்த்து சொல்லுங்க என்றதும் நான் என்னவோ ஏதோ என்று ப்தரிப்போய் எனது அறையிலுள்ள கடிகாரத்தில் மனியை பார்த்துவிட்டு சொன்னேன். உங்க வாட்ச் ஓடுதா என்றாள், ஓடுதுங்களே என்றேன், நீங்களும் பின்னாடியே ஓடுங்க என்று கூறிவிட்டு இமைக்கும் நேரத்தில் துண்டித்துவிட்டாள். ஏதோ கணவு கண்டால் வெளியில் சொல்லக்கூடாதாம். நான் இதை யாரிடம் சொல்ல? மீண்டும் அழைப்பு நான் விஜய் டி.வியிலிருந்து பேசுகிறேன் உங்களுக்கு என்ன பாடல் பிடிக்கும் என்றாள். நீங்கதான் முன்னாடி பேசுனதா என்று கோவமாக கேட்க இல்ல என் பிரண்டு என்றது அந்த குரல். ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வைக்காமல் பேசக்கூடிய தொலைபேசி ஒரு காலத்தில் இருந்தது சிலருக்கு நிணைவு இருக்கலாம். அதனால் வந்த வினை. என்னிடம் ஒவ்வொருவராக மொத்தம் 45 நிமிடம் பேசினார்கள், பேசியவர்கள் எனது சீனியர் பெண்குலங்கள் என்று பிற்காலத்தில் தெரிந்தது.


பட்டக்காலிலேயே................................

பாரதியார் பல்கலைகழகத்தில் எம்।எஸ்.சி க்கான நேர்முக தேர்வு ஏதோ கோவைக்கு பயணமானேன், நேர்முக தேர்விலும் இதே கேள்வி எழுப்பபட்டது. நான் தேர்வு செய்யப்பட்டால் உடனே முதல் வகுப்பு சான்றிதழ் சமர்பிக்கவேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துறைத்தலைவர்(பொறுப்பு) திரு தம்பிதுரை கூறிய தோரணையிலேயே புரிந்துவிட்டது நான் தேர்வு செய்யப்பட்டுவிடுவேன் என்பது. மேலும் நேர்முக தேர்வில் அழகப்பா பல்கலைகழக துறைத்தலைவர் சக்திவேலை பற்றி விசாரித்தார் தம்பிதுரை, பின்னர் தான் தெரிந்தது தம்பிதுரை அழகப்பா பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும் சக்திவேல்தான் அவருடைய ஆராய்ச்சி வழிகாட்டி என்பதும். ஒரு சில நாளில் பாரதியார் பல்கலைகழகத்திலிருந்து பதிவு தபால் வீட்டிற்கு வந்துள்ளது என்னை தொடர்புகொள்ள முயற்சித்து இரண்டு நாள் கழித்து விவரத்தை சொல்லவே நான் அதை ரீ-டைரக்ட் செய்து காரைக்குடிக்கு அனுப்ப சொல்லிவிட்டேன். விடுதியில் எனக்கு ஒதுக்கப்பட்ட 11 எண் அறையில் தங்காமல் 6ம் எண் அறையில் நண்பருடன் தங்கியிருந்தேன். என்னிடம் தபால்காரர் 11ம் அறை எது என்று கேட்டார் நான் கையைகாட்டிவிட்டு எனது அறைதான் 11 என்பதை மறந்து விவரத்தை கேட்காமல் விட்டுவிட்டேன். இரவு அழைத்து எனக்கு கடிதம் கிடைத்ததா என்று கேட்ட தந்தையிடம் இல்லை என்று கூறி நாளை ஒருமுறை தபால் நிலையத்தில் விசாரியுங்கள் என்று கூறினேன், இப்படி விசாரிப்பிலேயே இரண்டு நாள் போய்விட்டது. இறுதியாய் அழகப்பா பல்கலைகழகத்தின் தபால் நிலையத்தில் கேட்க கடிதம் வந்து மூன்று நாள் ஆகிறது என்றும் ஒரு துண்டுச்சீட்டு 11ம் எண் அறையில் போட்டதாகவும் கூறினார் தபால்காரர், பிறகுதான் தெரிந்தது அன்று அவர் கேட்டது எனக்காகத்தான் என்று. துண்டுச்சீட்டை எடுத்துக்கொண்டு சென்றவனிடம் நான் தான் கடிதத்திற்குறியவன் என்பதற்கான புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சி கேட்டனர். பிறகு நண்பர்களை அழைத்துக்கொண்டு பல்கலைகழகத்தில் சேர்ந்ததற்கான கட்டண ரசீதைக்காட்டி கடிதத்தை வாங்கி பிரித்துப்பார்த்தால் பாரதியார் பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி சேருவதற்கான கடைசி தேதியன்றுதான் நான் கடிதத்தையே கையில் வாங்குகிறேன். உடனே பாரதியார் பல்கலைகழத்திற்கு அழைத்தால் இன்று வரவில்லை என்றால் சேர்க்கப்படமாட்டாது என்று உறுதியாக கூறிவிட்டார்கள் அன்றோ சனிக்கிழமை. ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமை ஏதோ பண்டிகை காரணமாக அரசு விடுமுறை. உடனே வீட்டில் விவரத்தை கூறுமாறு என் நண்பன் ஒருவனுக்கு சொல்ல அவன் குழப்பிவிட்டான். என் தந்தை நான் கோவைக்கு செல்வதாக நினைத்து அவரும் கோவைக்கு கிளம்பியிருக்கிறார். குழப்பத்துடன் தவித்த என்னை நணபர்களும் சீனியர்களும் தைரியம் சொல்லி பேருந்தில் ஏற்றிவிட்டார்கள், புரியாத புதிராக வீடு வந்து சேர்வதற்குள் மேலும் ஒரு பதிவு தபால் பாரதியார் பல்கலைகழகத்திலிருந்து வந்திருக்கிறது வீட்டிற்கு. இரவு வீட்டிற்கு வந்தவனுக்கு இந்த செய்திகளால் மேலும் அதிர்ச்சி குழப்பம். நள்ளிரவு வீடு திரும்பிய என் தந்தை சிறிதும் கோபப்படாமல் பிரச்சனையை ஆலோசித்தோம் ஞாயிற்றுக்கிழமை தலைமை தபால் அதிகாரியை சந்தித்து புதிதாக வந்திருக்கும் பதிவு தபால் பற்றி கேட்க அவரோ இன்று எதுவும் செய்யமுடியாது வேண்டுமானால் ஒரு கடிதம் கொடுங்கள் அதை வைத்து உங்கள் தந்தையிடம் கடிதத்தை கொடுக்கிறேன் என்றார். அதுவும் இந்த கடிதம் கொடுக்க வேறு நடைமுறை உண்டாம், எங்கள் பகுதியில் தபால் பட்டுவாடா செய்யும் தபால்காரர் முன்னிலையில் தான் கையெழுத்து போடவேண்டுமாம், எனவே அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியம் என்று கூறிவிட்டார். சரி ஏதோ உள்ளூரில் இந்த அளவிற்கு கூடவா செய்யமுடியாது என்ற நம்பிக்கையில் எனது கல்லூரி துறைத்தலைவரிடம் மீண்டும் போய் நின்று எனது நிலையை கூறினேன்.




கவணக்குறைவு.............................

என்னப்பா இது சீட்டு வாங்க தெரிஞ்ச உனக்கு பொறுப்பு இல்லையே இப்படி டென்னிஸ் பந்து மாதிரி அல்லாடுறியே என்று கூறிவிட்டு பாரதியார் பல்கலையின் துறைத்தலைவர் தம்பிதுரையிடம் பேச அவரோ சேர்க்கை நடைமுறைகளில் தாம் ஏதும் தலையிடமுடியாது, மாணவர்களை தேர்ந்தெடுப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று கூறிவிட்டார்। ஆனால் அவர் மீது அந்த ஆண்டில் தான் மாணவர் சேர்க்கையில் குழறுபடி செய்ததாக ஒரு மாணவி வழக்கு தொடர்ந்தார், நீதிமண்றத்தின் கண்டனத்திற்கும் ஆளானார்। அந்த மாணவி வழக்கில் வெற்றி பெற்றாலும் காலம் கடந்துவிட்டதால் அவரால் சேரமுடியவில்லை. ஆனால் எனது துறைத்தலைவரோ எனக்கு நம்பிக்கை தரும் விதமாக உன்னோட சீட்டு உனக்கு கிடைக்கனும் இல்லாட்டி நான் விடமாட்டேன், நீ தைரியமா போ என்று கூடவே இரண்டு பரிந்துரை கடிதங்களை இரண்டு பல்கலைகழக சிண்டிகேட் உறுப்பினர்களை அன்றே சந்திக்குமாறு கொடுத்து அனுப்பியதோடு அவர்களிடம் தொலைபேசியில் பேசினார். ஒருவர் மட்டுமே இருந்தார் அவரோ பாரதிதாசன் கல்லூரியின் அப்போதைய முதல்வர் திரு. ஆறுமுகம். முதலில் சந்திக்க மறுத்த அவரிடம் மாணவனை சந்தியுங்கள் பிறகு நீங்கள் உங்கள் விருப்பபடி உதவுவதா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள் என்று சொன்னவர் முடிந்தவரை ஒரு சிபாரிசு கடிதம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் என்னிடம் அவர் கல்லூரி முதல்வர் என்பதால் அவருக்கு பல்கலைகழக்த்தில் ஆக வேண்டிய வேலை நிறைய இருக்கும் அதனால் அவர் கடிதம் கொடுப்பது சந்தேகம்தான் கொடுத்தாலும் பெரிய மரியாதை இருக்காது, இருந்தாலும் நீ பதிவாளரை சந்திக்க ஒரு கடவுச்சீட்டாக இருக்கும் அதனால் சந்தித்து பேசு என்றார். நான் உடனடியாக அந்த சிண்டிகேட் உறுப்பினரை ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். என்னிடம் சற்று தன்மையாக பேசியவர் இதெல்லாம் நான் எப்படிப்பா செய்யமுடியும் நீ அன்றைய தினம் போகாதது உன் தவறுதானே என்றவர், ஒரு கடிதத்தில் "The Student who is bearing this letter is known to me and his case may be considered" என்று எழுதி கையெழுத்திட்டு தனது சிண்டிகேட் முத்திரையையும் பதித்து கொடுத்தது என்னை நெகிழ வைத்துவிட்டது. பல மனிதர்கள் தொலைபேசியில் பேசும்போது சற்று கடினமாக பேசி தவிர்ப்பதும் பிறகு நேரில் சந்திக்கும் போது நாம் எதிர்ப்பார்ப்பதைவிட அதிகமாக செய்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுகின்றனர். கடிதத்தை பெற்றுக்கொண்டு நன்றியுடன் அடுத்த சிண்டிகேட் உறுப்பினர் முனைவர் கிங்ஸ்லி, எங்கள் கல்லூரி தாவரவியல் துறைத்தலைவர் தான் அவரை சந்திக்க சென்றால் அவர் வீட்டில் இல்லை. நெடுநேரம் இரவு வரவில்லை என்பதை என் துறைத்தலைவருக்கு தெரிவித்தேன். சரி நாளைக்கு மதியத்திற்கு பிறகு முயற்சி செய் இப்போது பத்திரமாக வீட்டிற்கு போ என்று கூறிவிட்டார். அடுத்த நாள் திங்கட்கிழமை வீட்டிலிருந்து கிளம்பும் முன் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு, என் தந்தையிடம் அடுத்த நாள் பதிவு தபாலை பெற்றுக்கொண்டு விரைவாக கோவை வருமாறு கூறிவிட்டு வேண்டிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஈரோடு நோக்கி புறப்பட்டேன். அதற்கு முன்பே என் கல்லூரி தோழன் கண்ணனின் வீட்டில் இரவு தங்குவதற்கு சொல்லிவிட்டேன். மதியம் முனைவர் கிங்ஸ்லி வீட்டில் இல்லை எனவே என் நண்பன் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை மீண்டும் முனைவர் கிங்ஸ்லி வீட்டிற்கு வந்தபோது இரவு 7.30 மணி வீட்டுத்தோட்டத்தில் ஏதோ கொத்திகொண்டு இருந்தார். நான் விவரத்தை சொல்ல அவரோ என்னப்ப இது இதுக்கு நான் என்ன பண்ணமுடியும் எம் பொண்ணுக்கு சென்னை பல்கலைகழகத்துல ஒரு மணி நேரம் காலதாமதம் ஆனதால சீட் கிடைக்கல, உன்னோட டைம் முடிஞ்சு ரெண்டு நாள் ஆகுதுப்பா என்றார். இல்ல சார் இன்னும் வெய்டிங் லிஸ்ட் மூவ் ஆகல, நாளைக்குத்தான் அதுக்குள்ள தடுத்திடலாம் சார் என்றேன். நான் யாருப்ப அதை தடுக்க சிண்டிகேட் பல்கலைகழகம் சரியா இயங்குதான்னு பார்க்கத்தானே தவிர நிருவாகத்தின் நடவடிக்கைகள்ல தலையிட்டு உடைக்கிறது இல்லப்பா என்னால முடியாது என்று கூறிவிட்டார். உடனே எனது துறைதலைவருக்கு விசயத்தை எடுத்துக்கூறினேன், சரி பயப்படாத நான் மதியமே அவருக்கு முயற்சி பன்னினேன் கிடைக்கல அவரு ஆள் இருந்த நான் பேசுறேன் பிரச்சனையில்ல என்றார், அதோடு இவர் பவர்புல்லா ஆளு ரொம்ப கறார் பேர்வழி ஆனா இவர் நமக்காக கெல்ப் பன்னினா யாரும் தட்டமுடியாது ஏனா இவர் நியாயமாதான் சிபாரிசு பன்னுவார் என்று கூறிவிட்டு எனது நண்பனின் தொலைபேசி எண்ணை குறித்துக்கொண்டு மீண்டும் தானே அழைப்பதாக கூறினார். சில நிமிடங்களில் அவரே அழைத்தார். நான் அவர்கிட்ட பேசிட்டேன்பா, நீ நாளைக்கு சரியா 9.15 மணிக்கு துனை பதிவாளர் தங்கவேலு அலுவலகத்துக்கு போயிடு எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றார். சிலரிடம் பேசவேண்டியவர்கள் பேசினால் நடக்காத விசயமும் நடக்கும்.நம்பிக்கையுடன் இருந்தாலும் விடிய தூங்கவில்லை, இரவு 3.30 மணிக்கே கோவை நோக்கி புறப்பட்டுவிட்டேன். அதிகாலை சூரியனின் விடியலில் கோவையில் இறங்கி மருதமலை பேருந்து பிடித்து பயனமாகி, எனது சீனியரின் அறையில் சென்று குளித்துவிட்டு துனை பதிவாளர் தங்கவேலுவின் அறை இருக்குமிடத்தை கேட்டுக்கொண்டேன். குளித்து கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு சீனியருடன் பல்கலைகழக நிருவாக காட்டிடம் நோக்கி புறப்பட்டேன். கட்டிடத்தின் வெளியே விடைபெற்றுக்கொண்டு சீனியர் புறப்பட்டுவிட நான் துனை பதிவாளர் அறைக்கு வெளியே 9.15க்காக காத்திருந்தேன். சரியாக 9.15 க்கு உள்ளே நுழைந்தேன் ஆனால் பல்கலைகழக வேலை நேரம் 9.30 தான் ஆரம்பம். நடந்த விபரங்களை கேட்டுக்கொண்ட துனை பதிவாளர் சரி தபாலின் கவரைக்கொடு என்றார், அதாவது ரீ-டைரக்ட் செய்யப்பட்டது, டெலிவரி செய்யப்பட்ட தேதி இவைகளின் விவரத்தை அறிய. நான் கவரை கொடுத்ததுதான் தாமதம் மனிதர் சீட்டிலிருந்து பாயாத குறையாக யாருயா இவன் கிங்ஸ்லி இவன் என்ன பெரிய இவனா, இவன் என்ன உனக்கு ரெக்கமெண்டேஷனா? என்று குதியோ குதி என்று குதிக்க, நான் ஆடிப்போய்விட்டேன். காரணம் என் துறைத்தலைவர் முனைவர் கிங்ஸ்லியின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கவரில் குறித்திருந்ததுதான். எனக்கு கவலை தொற்றிக்கொண்டது அட இவர நாம நேராப்பார்த்திருந்தா கூட பிரச்சனையில்ல போல இருக்கே இப்ப இவரு என்ன பன்ன போறாரோ என்ற கவலையில் பவ்யமாக நின்றேன், இன்னொரு சிண்டிகேட் ஆறுமுகத்தின் கடிதத்தை மறைத்துக்கொண்டேன். தொலைபேசி ஒலித்தது தொலைபேசியை எடுத்து பேசிய மனிதரிடம் கடுமை மாறி மென்மையும் புன்னகையும் தவழ்ந்தது, பேசியது முனைவர் கிங்ஸ்லிதான். நலம் விசாரிப்புகள் கல்லூரி, பல்கலைகழக நடப்புகள் என்ற பேச்சுகளினூடே ஆமாங்க அந்த கேண்டிடேட் என் முன்னாடிதான் இருக்காரு என்றதும் புரிந்துகொண்டு துனைபதிவாளரின் அறை தடுப்பை விட்டு வெளியே வந்து நின்று பேச்சுக்களை உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தேன் சுமார் 5 நிமிட பேச்சுக்குப்பின் உள்ளே அழைக்கப்பட்டேன். ஏன்யா இந்த மாதிரி ரெக்கமெண்டேஷன்ல்லாம் கொண்டு வரிங்க உன் பிரச்சனை நியாயமான பிரச்சனைதானே, எதுவாயிருந்தாலும் நேரடியா வரனும்யா இப்படியெல்லாம் ஏன் எழுதிகிட்டு வர என்றவரிடம் இல்லங்க சார் அது எங்க HOD தான் எழுதிகொடுத்தாரு என்றேன் மேலும் சிக்கலாகிவிடும் விவரமறியாதவனாக. ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, அவர் முனைவர் கிங்ஸ்லியிடம் பேசியது இதுதான், இது ஒன்னும் சீரியசான விசயமல்ல, குறைந்தபட்ச அவகாசம் 15 நாட்கள் இருக்கவேண்டும், ஆனால் நாங்கள் கொடுத்த அவகாசம் ஒரு வாரம் தான் அதே சமயம் பையனுக்கு கொஞ்சம் லக் இருக்கு வெய்டிங் லிஸ்ட் மூவாகறதுக்கு முன்னாடியே வந்துட்டான் என்று அதோடு இந்த விவாகாரத்தை பாசிட்டிவாக முடிப்பதாகவும் கூறிவிட்டு வைத்தார். நிம்மதி பெருமூச்சுடன் அவரது உத்தரவுக்காக காத்திருந்தேன். தம்பி நீங்க நடந்த விவரத்தை ஒரு லெட்டர் எழுதி குடுங்க என்றார். கடகடவென எழுதிகொண்டு அவரிடம் நின்றேன், கடிதத்தை படிக்காமலேயே வைத்துவிட்டு தொலைபேசி எண்ணை சுழற்றி தம்பிதுரை வந்துட்டாரா என்று கேட்டார், சரி வந்ததும் நான் பேசினேன்னு சொல்லு எனக்கூறிவிட்டு போனை வைத்துவிட்டு என்னிடம் தம்பி நீங்க கம்பியூட்டர் டிபார்ட்மெண்டுக்கு போங்க நான் சொல்றேன் என்று கூறிவிட்டார். அறக்கப் பறக்க கம்பியூட்டர் சைன்ஸ் டிபார்ட்மெண்ட் நோக்கி விரைந்தேன், நான் துறைத்தலைவரின் கதவை நெருங்க நெருங்க யாருய்யா அது நாகராஜன்னு லேட் கேண்டிடேட்டு கூப்பிடு என்றார் தம்பிதுரை உள்ளிருந்து நான் சட்டென கதவருகே நின்றேன், கதவை திறந்துகொண்டு வெளியே வந்த பியூன் தங்கவேலு யாருப்பா நாகராஜன் என்றார், நான் தான் சார் என்றேன், அட உன்னத்தான புரொபசரு கூப்புடுறாரு உள்ள போ சீக்கிரம் என்றார். நான் உள்ளே சென்றேன். உனக்கு என்னய்யா பிரச்சனை என்றார், நான் தயராக வைத்திருந்த வார்த்தைகளை சொல்ல வாயெடுக்கும் போதே, நான் உங்கிட்ட அன்னைக்கே என்ன சொன்னேன் அட்மிஷனுக்கு வரும்போது பர்ஸ்ட் கிளாஸ் ப்ரொவிசனல் சர்டிபிகேட் இருக்கனும்னு சொன்னேன்யில்ல புரிஞ்சிக்காம இப்ப்டி லேட்டா வந்து நின்னா என்னய்யா அர்த்தம் என்றார். அவர் என் நேர்முக தேர்வில் சொன்ன வார்த்தைகளை சொன்னபோது நான் தான் அன்னிக்கே உன் அட்மிஷன கன்பார்ம் பண்ணிட்டேனே என்பதை சொல்லாமல் சொல்கிறார் என்று புரிந்துகொண்டேன். சரி டாக்குமெண்ட்ஸ் வச்சிருக்கியா என்றார். சார் இந்தாங்க என்று அட்மிஷனுக்காக அனுப்பபட்ட லெட்டரை கொடுத்தேன். இது இல்லையா டி.சி, மார்க்சீட்டு, கம்யூனிட்டி சர்டிபிக்கேட் வச்சுருக்கியா என்றார் இல்ல சார் அழகப்பா யுனிவர்சிட்டில இருக்கு என்றேன். ஏன்யா அங்க உனக்கென்ன குறைச்ச்லுன்னு இங்க வர இங்க ரொம்ப கஷ்டம் தெரியுமில்ல என்றார். தெரியும் சார் என்றேன். அப்புறம் ஏன்யா வர்ற என்றார், சார் காரைக்குடி ரொம்ப தூரம் சார், என்றேன் வீடு எங்க என்று கேட்டவர், ஏன்ய்யா ஒரு 2 மணி நேரம் வித்தியாசம், சினிமா பார்க்க கியூல நிக்கிறீங்க இல்ல என்றார். சரி உன் பிரச்சனைய ஒரு லெட்டர்ல எழுதிகொடு என்றார். சார் டெபுட்டி ரெஜிஸ்ட்ரார் கிட்டயே குடுத்திட்டேன் என்றேன். யோவ், இங்க ஒன்னு எழுதுயா என்றவர் இவனுங்கல எப்படி சமாளிக்கிறது. பெயிலாவுட்டும் பாரு தொலச்சிபுடுறேன் என்று மிரட்டினார். வெளியே வந்து கடிதம் எழுதிகொடுத்துவிட்டு காத்திருந்தேன். வெயிட்டிங் லிஸ்ட்டில் காத்திருந்தவர்கள் 30 பேர், ஆனால் மொத்த சீட்டே 25 தான். தனது அறையிலிருந்து வந்த தம்பிதுரை, பிரண்ட்ஸ் இப்போ மொத்தம் மூனு சீட்டு வேக்கண்டாயிருக்கு அதுல யார் யார் செலக்ட்டடுங்கிறது நான் டெப்டி ரெஜிஸ்ட்ரார் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து அனவுன்ஸ் பண்றேன் என்றார். இதுதான் ப்ரேக்கப் என்று 1-MBC, 1-SC, 1-OC போட்டார். காத்திருப்போரில் என்னுடன் கருணை மதிப்பென் பெற்ற கல்லூரி நண்பனும்(MBC), தற்போது அழகப்பாவில் என்னுடன் படிக்கும் ஒருவனும்(BC) அடக்கம். BC க்கு சீட் இல்லாததால் தான் கிளம்புவதாக கூறினான் அழகப்பா நண்பன் அவனை சமாதனப்படுத்தி வந்தபிறகு முழுமையாக இரு பார்க்கலாம் என்றேன். என்னை துனை பதிவாளர் அறைக்கு வரச்சொல்லிவிட்டு கிளம்பினார் தம்பிதுரை. நான் அங்கு சென்றதும் இந்த பையனோட சீட்ட கன்பார்ம் பன்னினது போக மூன்று சீட் பேலன்ஸ் என்று போனது டிஸ்கஷன். எனக்கு சிறிது நேரத்தில் எப்படி கோட்டா ஒதுக்குகிறார்கள் என்பது ஓரளவு புரிந்தது. எனக்கு அன்று போக மூண்று நாட்கள் அவகாசம் தரப்பட்டது பாரதியார் பல்கலைகழகத்தில் சேர, அதற்கான கடிதங்களை எழுதி கொடுத்துவிட்டு என்னிடம் ஒரு நகல் வைத்துக்கொண்டேன். மீண்டும் துறைக்கு திரும்பி காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அறிவிக்கப்பட்டனர். 1-MBC என்னுடன் கருணை மதிப்பென் பெற்ற கல்லூரி நண்பன் 1-SC, SC கேண்டிடேட்டுகள் யருமில்லாததால் MBC பட்டியலில் இருந்த அடுத்த பெண்ணிற்கு போனது, 1-OC ல் OC கேண்டிடேட்டைவிட அதிக மதிப்பென் பெற்றிருப்பதால் என்னுடன் அழகப்பாவில் படித்த BC க்கு போனது. முதலில் அறிவிக்கப்பட்டதற்கும் தற்போதைய அறிவிப்பிற்கும் எவ்வள்வு வேறுபாடு பார்த்தீர்களா? அழகப்பா நண்பன் போயிருந்தால் அவனுக்கு கிடைத்திருக்குமா? அல்லது என்னுடன் கருணையடிப்ப்டையில் மதிப்பென் பெற்று இருக்காமல் விட்டிருந்தால் என் கல்லூரி நண்பனுக்கும் சீட் கிடைத்திருக்குமா?
தடையைத் தாண்டி.............

மதியம் பதிவு தபாலில் வந்த ப்ரொவிசனல் சர்டிபிக்கேட்டுடன் என் தந்தை மதியம் 2।30 மணிக்கு பல்கலைகழகத்திற்குள் நுழைந்தவரிடம் விவரத்தை கூறினேன், சரிப்பா சாப்பிடு என்றார்। ஆனால் சாப்பாட்டில் ஏனோ மனமில்லை, ஆனால் ஆட்டுக்கறி குழம்பும் தோசையும் ஓரளவு சாப்பிட்டுவிட்டு நானும் என் தந்தையும் என் கல்லூரி துறைதலைவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டோம். ஆனால் என் தந்தைக்கு நான் அழகப்பாவிலிருந்து பாரதியாருக்கு மாறுவதில் அவ்வளவாக உடன்பாடில்லை. இருந்தாலும் என் விருப்பத்தில் விட்டுவிட்டார், ஆனால் யோசித்து முடிவெடுக்க சொன்னார், ஆனால் நான் எப்போதிருந்தோ கண்ட கணவு, என் மனதில மாறுதல் இல்லை, அன்றிரவே நானும் அழகப்பாவின் மற்றொரு நண்பனும் காரைக்குடி நோக்கி பயணமானோம், விடுதியில் நண்பர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் இரண்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு துறைக்கு சென்று காத்திருந்தேன். முதல்முறையாக வகுப்புத்தோழிகள் என்னிடம் பேசினர், வாழ்த்துக்கள் கூறினர். துறைத்தலைவர் திரு.சக்திவேலை சந்தித்து விலகல் கடிதத்திலேயே விளக்கமாக எழுதி கொடுத்துவிட்டேன். படித்து பார்த்துவிட்டு, என்ன பாரதியாருக்கு போறீங்களா என்றார், யெஸ் சார் என்றேன், சரி குயிக்கா முடிக்க சொல்றேன் வெயிட் பண்ணுங்க என்றார். உடனே எங்களது T.C மற்றும் Conduct Certificate எழுதப்பட்டது, அதை வைத்துக்கொண்டே ஆபீஸ் அசிஸ்டெண்ட் அமர்ந்துகொண்டு இருந்தார். நாங்கள் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. சுமார் 12.00 மணிக்கு பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பபட்டது. அங்கே எங்களை அழைத்த ஒரு கிளார்க் 50 ரூபாய் கொடுங்கள் என்று வெளிப்படையாக கேட்ட விதம் அதிர்ச்சி தருவதாய் இருந்தது, என்னுடன் இருந்த நண்பன் சட்டென 50 ரூபாயை கொடுத்துவிட்டான். சரி 5 மணிக்கு வாங்க ரெடியாயிடும் என்றார். வெளியே வந்து அவனிடம் டே என்னடா யுனிவர்சிட்டியில கூட லஞ்சமா என்றேன்? இல்லடா இப்ப நமக்கு வேலை நடக்கனும் என்றான். நான் இயற்பியல் துறைதலைவரை சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு வந்தேன். மாலை ஆவணங்கள் தயாராகவில்லை, அடுத்த நாள் மாலைதான் கிடைத்தது. நண்பர்களிடமும், சீனியர்களிடமும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு கோவைக்கு புறப்பட்டு அடுத்த நாள் அலைந்து திரிந்து பாரதியார் பல்கலைகழகத்தின் மாணவனானேன். பின்னர் பி.எஸ்.ஜி யில் கிடைத்த எம்.எஸ்.சி யில் சேரவில்லை. பல்கலைகழகத்தைவிட கல்லூரி பெரிதில்லையே.
பட்ட மேற்படிப்பு........................

முன்பு போல அல்லாமல் இங்கே எல்லாமே சுறுசுறுப்பு, விருவிருப்புதான், பேராசிரியர்கள் இல்லை எல்லோரும் வெளிநாடுகளில் ஆராய்ச்சி, ஆஸ்திரேலியா, ஜிம்பாவே, லண்டன் போண்ற இடங்களில் ஆராய்ச்சிக்காக சென்றிருந்த பேராசிரியர்கள் ஒவ்வொருவராக என் இரண்டாமாண்டில் தான் திரும்பினார்கள் ஆனாலும் யாரும் பாடம் நடத்தவில்லை। வகுப்பில் எப்போது ஜோடி ஜோடியாக அமர்ந்து கடலையோ கடலைதான்। ஆனால் அனைவருமே படிப்பில் கெட்டிக்காரர்கள் தான்। இந்த அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் படித்து 97% சதவிகிதம் வாங்கியவர்கள் எல்லாம் இங்கே மண்ணை கவ்வி அனைத்து பாடத்திலுமே பெயிலானார்கள்। அப்படி ஒரு பாடத்திட்டம்। நாம் எப்போதும் போல 60-65% தான், எனக்கு மார்க்கு முக்கியமல்ல புரிதல்தான் முக்கியம். ஒருவேளை இவன் என்ன படிப்பாளியாக தெரியவில்லையே என்று நினைக்கலாம். ஆனால் மதிப்பென்னைவிட செயல்முறையில் தான் நடைமுறை திறம் இருக்கிறது. ஆறு மாதம் புராஜெக்ட் கே.ஜி இன்போசிஸ்டம்ஸ் நிறுவணத்தில் அப்போதைய கோவை புட் செல் டி.எஸ்.பி, இளங்கோவனின் சிபாரிசில் கே.ஜி மருத்துவமனைக்கு ஒரு சாப்ட்வேர் தயாரித்தேன். அப்போதே மேட்டூர் மால்கோவில் புராஜெக்ட் கிடைத்தது ஆனால் அங்கு செய்யவில்லை.



அண்ணையை இழந்த துயரம்.........

எங்கள் வீட்டில் யாருமே எதிர்பாராத ஒரு துயரச்செய்தி என் தாயாரை புற்றுநோய் தாக்கியிருந்ததுதான்। ஆரம்பத்தில் ஒரு சிறிய கட்டிதான் என்று கூறினார் குடும்ப டாக்டர் ஆனால் எனக்கு சந்தேகம் இருந்ததால் நான் சென்னை இராமசந்திராவிற்கு போகலாம் என்றேன்। ஆனால் அடுத்த நாளே சேலத்திலுள்ள ஒரு மருத்துவமணையில் அறுவை சிகிச்சையை எந்த பரிசோதனையும் இன்றி செய்துமுடித்து அடுத்த நாள் வீட்டிற்கும் அழைத்து வந்துவிட்டனர்। அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட திசுவை கோவையில் உள்ள பரிசோதனை மையத்தில் பரிசோதிக்கப்பட்டு முடிவு தெரிய மூண்று நாட்கள் ஆகிவிட்டது, முடிவோ பேரதிர்சியாக இருந்தது. அதற்குள் இரத்தத்தில் கலந்த நச்சு உடலில் பரவ ஆரம்பித்த பிறகுதான் இராமசந்திராவில் சேர்த்தோம், அங்கு நல்ல சிகிச்சையளிக்கபட்டது ஆனாலும் முதலிலேயே தவறு நிகழ்ந்துவிட்டதால் இனி சிக்கலை எப்படி தீர்ப்பது சிரமமாக இருந்தது. அறுவை சிகிச்சை, கதிர் சிகிச்சை என மாறி மாறி சிகிச்சையளிக்கப்பட்டது, ஆனால் இறுதியாக மூளையை தாக்கி தன் கோரத்தை காட்டியது புற்றுநோய். உடனே மீண்டும் இராமசந்திராவிற்கு போனாலோ கைவிரித்துவிட்டனர், அடையார் கேன்சர் இன்ஸ்ட்டியூட்டில் சேர்க்க முயற்சி செய்தால் அங்கும் அனுமதிக்கப்படவில்லை. எனவே தேனாம்பேட்டை ராய் மெமோரியல் மருத்துவமனையில் சேர்த்து ஒரு மாதம் சிகிச்சையளித்தோம் கொஞ்சம் நம்பிக்கை வந்தாலும் மனதில் ஒரு அச்சம் இருந்துகொண்டே இருந்தது, சுமார் இரண்டு மாதம் தான். மீண்டும் நிலைமை மோசமானது, என்னால் படிப்பிற்கு இடையில் அலையமுடியவில்லை. எனவே கோவை கங்கா மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவரும் எனது நன்பருமான திரு பாலசுப்பிரமணியன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன் அவர் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் தனக்கு தெரிந்த துளசி என்ற புற்றுநோய் நிபுனரிடம் தானே விவரமாக பேசிவிட்டு என்னிடம் நீங்கள் இன்றே சந்தியுங்கள் என்றார். அவர் சொன்ன மருத்துவரோ நீங்கள் இனி மருத்துவம் பார்க்கவேண்டாம் இனி எந்த பயனில்லை என்றார் நான் மிகவும் நொந்துவிட்டேன், எனக்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டார். நான் மீண்டும் எனது நன்பரிடமே பேசினேன் அவரும் பேசிவிட்டு இதே கருத்தை கூறினார். நான் இதை வீட்டில் தங்கைகளிடம் எப்படி சொல்வது என்று புரியாமல் விழித்தவன் ஒருவழியாக சொல்லிவிட்டேன். ஆனால் எங்கள் யாராலும் அமைதியாக இருக்கமுடியவில்லை ஓரிரு நாளில் நாங்கள் டாக்டரிடம் ஆலோசிக்காமலேயே நேரடியாக மருத்துவமணைக்கே போய்விட்டோம். ஆனால் அந்த பெண் டாக்டரோ அமெரிக்காவிற்கு போய்விட்டார், மீண்டும் நண்பரிடம் பேசி, அந்த பெண் டாக்டர் தன் சார்பில் ஒரு மருத்துவரை பார்க்க சொன்னார். 15 நாள் சிகிச்சை அம்மாவை மிக மோசமாக்கிவிட்டது, அமெரிக்காவில் இருந்து வந்த பெண் டாக்டரோ என்னை அழைத்து ஏன் நான் தான் சிகிச்சை வேண்டாம் என்று சொன்னேனே என்றார், என்றாலும் என் நிலைமையை புரிந்துகொண்டு மேலும் பத்து நாட்கள் தன் மேற்பார்வையில் சிகிச்சையளித்தார். கடைசியாக 2 யூனிட் இரத்தம் கொடுக்கப்பட்டு மருத்துவமணையிலிருந்து அனுப்பினர். ஆனால் அதிகபட்சம் மூண்று மாதம் அவகாசமே கொடுத்தார் அந்த மருத்துவர். நானோ அப்போது எம்.பி.ஏ முதலாமாண்டு முடித்து மதுரை டி.வி.எஸ் சில் இரண்டு மாத புராஜெக்ட்டை ஆரம்பித்த மூன்றாவது நாள் அலுவலக்த்திற்கு வந்த அழைப்பு அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது உடனே புறப்பட்டு வா என்பதுதான், நான் உடனே எங்கள் உறவினரும் குடும்ப மருத்துவருமான டாக்டர் முத்துசாமியை அவர்களின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன், அவரோ இல்லடா ஏன் உனக்கு தெரியாதா இந்த நோய் வந்தா அடிக்கடி இந்த மாதிரி மயக்கம் வருவது சகஜம்தான் நான் பார்த்துகுறேன் நீ கவலைபடமா உன் வேலையை கவனி என்றார். அறை மணி நேரத்திற்கு ஒருமுறை அவரை தொடர்புகொண்டு விசாரித்துக்கொண்டிருந்தேன், 3 வது அழைப்புக்கொல்லாம் டே நீ அங்கிருந்துகிட்ட விசாரிச்சிகிட்டு இருந்தா எப்படி உடனே கிளம்பி வா என்று கூறியதும் நான் உடைந்துவிட்டேன், உடனே ஈ.டி.பி செக்க்ஷனின் சீனியர் மேனேஜர் திரு. ஆணந்தராஜ் அவர்களிடம் நிலைமையை சொல்லிவிட்டு உடனே கிளம்பினேன். மாலையே மருத்துவமணைக்கு போய்விட்டேன். சொந்தங்கள் சில அருகில் இருந்தனர், நன்றாக தெம்பாகவே பேசினார் பயப்படவேண்டாம் நான் நன்றாகவே இருக்கிறேன் என்று கூறியது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. என்னை முகசவரம் செய்துவிட்டு வருமாறு கூறினார், வீட்டிற்கு சென்று சவரம் செய்துகொண்டு சற்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் இரவு மருத்துவமணைக்கு வந்துவிட்டேன். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் படிப்படியாக நிலைமை மோசமாகி கொண்டே போனது, முதலில் உணவு உட்கொள்வதில் சிரமம், பின் பேச்சு குறைய ஆரம்பித்தது, என்னை அழைத்த மருத்துவர் நீ வீட்டுக்கு அழைச்சிகிட்டு போறதுன்னா போ ஆனா இங்க இருக்கிறதனால எனக்கு ஒன்னும் சிரமமில்ல என்றார், என்ன சார் நிலைமை வெளிப்படையா சொல்லுங்க என்றேன். இல்லடா இனிமே காப்பாத்தமுடியாது உலகத்துல யாராக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல இந்த நோய்வாய்பட்டவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தாலும் முடிவ யாரும் மாத்தமுடியாது, மனச தைரியமா வச்சிக்கோ இன்னும் ஒரு சில நாள் தான் ஆனா இனி மருந்து கொடுப்பதனால எந்த பயனுமில்ல ஆனா நீ வேற எங்கயாவது கொண்டு போனாலும் ரொம்ப சிரமபடுத்திடுவாங்க ஆனா பயனிருக்காது அதனால் "PREPARE HER FOR A PEACEFUL END" என்றே கூறிவிட்டார், நான் புரிந்துகொண்டேன், அம்மாவிடம் வீட்டிற்கு போகலாம் என்றதும் டாக்டர் என்ன சொன்னார் என்றார், வீட்டிற்கு அழைத்து சொல்லுமாறு கூறியிருக்கிறார், மீண்டும் சிரமம் என்றால் வரச்சொன்னார் என்று கூறினேன், அரை மனதுடன் வீட்டிற்கு கிளம்பினோம், நானே காரில் அம்மாவை தூக்கிகொண்டு வந்து அமரவைத்தேன். ஆனால் நிலைமை மோசமாகி கொண்டே போனது, யாரும் தூங்கவில்லை, என்னால் பெற்ற தாயின் துயரம் கண்டு வேதனையை தாங்கமுடியவில்லை, கடந்த ஒரு வாரத்தின் அலைச்சல் என்னை அசதியாக்கினாலும் தூங்கவில்லை, பேச்சு முற்றிலுமாக இல்லை நள்ளிரவு தாகத்தால் துடித்தார் ஆனால் தண்ணீர் கூட இறங்கவில்லை, ஒரு சொம்பு தண்ணி குடிச்சுட்டா நிம்மதியா உசுர விட்டுறுவேன் என்று செய்கையால் காட்டியதை பார்த்து ஒரு மகனால் பெற்ற தாயின் தாகத்திற்குகூட தண்ணீர் கொடுக்கமுடியவில்லையே என்று துடித்தவன் விடியற்காலை எப்பாடுபட்டேனும் ஒரு சொம்பு தண்ணீர் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு கோவைக்கு நான் மட்டும் புறப்பட்டேன், மீண்டும் அந்த பெண் டாக்டர் வெளிநாடு பயணமாகியிருந்தார், அதனால் வேறு மருத்துவர் நிலைமையை கேட்டுக்கொண்டு 5 டாக்டர்கள் ஆலோசித்தனர் பின்னர் சில மருந்துகளை எழுதிகொடுத்தனர், தண்ணீர் கொடுக்கமுடிந்தால் கொடுத்து அழைத்து வாருங்கள் இங்கே வந்தால் தான் மேலும் சிகிச்சையளிக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். நான் வீட்டிற்கு போகும் முன்பு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர், நான் மருந்தை கொடுத்து சில மணி நேரத்தில் நன்றாகவே தண்ணீர் குடித்ததை கண்டு நான் என் கடமையை செய்ததாகவே கருதினேன், இந்த மருந்தை குடித்து உடல்நிலை சற்று தேறியதும் தனக்கு மரணமில்லை என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டது. ஆனால் எந்த நேரத்திலும் உயிர் பிரியலாம் என்பதால் நான் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன். ஆனால் அம்மாவின் உடல்நலை தேற ஆரம்பித்தது. நன்றாகவே நீர் இறங்கியது, ஒரு சில வார்த்தை பேசினார். இப்படியே அடுத்த நாள் மதியம் வரை நகர்ந்தது. ஆனால் உறவினர்கள் தொடர்ச்சியாக வர ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அம்மாவோ என்னை கோவைக்கு அழைத்து போ என்கிறார், எனக்கோ அங்கு போகும் வழியிலோ போன பின்போ உயிர் பிரிந்துவிட்டால் நான் தனியாளாக என்ன செய்யமுடியும்? இருப்பினும் கிளம்பினோம், நாங்கள் எங்கள் தாயாருடன் செய்த கடைசி பயணம், போகும் வழியில் கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பிள் பல்ப் கொடுத்துக்கொண்டே போனோம், ஆனால் கண்கள் சாம்பல் நிறமாக மாறிக்கொண்டிருந்தது ஆனால் அது அம்மாவிற்கு தெரியாது. ஒருவழியாக மருத்துவமணை போய் சேர்ந்தோம், பரிசோதித்த மருத்துவர் நான் எந்த உத்திரவாதமும் கொடுக்கமுடியாது எந்த நேரத்திலும் உயிர் பிரியலாம் நீங்கள் எதற்கும் தயாராக இருந்தால் சேர்த்துகொள்கிறேன் ஆலோசித்து சொல்லுங்கள் என்றார் நான் தங்கைகள் தம்பி கூடி ஆலோசித்தோம் ஆனால் அம்மாவிடம் ஏதும் சொல்லவில்லை. அன்று இரவு நிலைமை மோசமாகிகொண்டே போனது. அடுத்த நாள் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் அதற்குமுன் ஆகாரம் கொடுக்கவேண்டும் டியூப் மூலம் தான் செய்யமுடியும் என்று எங்களை வெளியில் அனுப்பிவிட்டு டியூபை செலுத்த முயற்சித்தவர்கள் உயிரை எடுத்துவிட்டார்கள், இறுதி மூச்சி போகும்போதுதான் உள்ளே அனுமதிக்கப்பட்டோம், நாங்கள் கத்திக்கொண்டே உள்ளே நுழைவதை உயிர்மூச்சை திரட்டி கண்ணை சுழற்றி பார்க்கும் போது சுயநினைவு போய்கொண்டிருந்தது, இறுதியாய் ஒரு மூச்சு இழுத்தது எங்களின் மூச்சாய் வாழ்ந்த தாயை இழந்துவிட்டோம். இந்த நிமிடமும் என்னால் விம்மி வரும் அழுகையை அடக்கமுடிவதில்லை. அதற்கு பின் தங்கையின் திருமணம், சீமந்தம், குழந்தை பிறப்பு என வீட்டில் நடந்த ஒவ்வொரு முறையும் என் தாய் இல்லாமல் போன வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியவில்லை, என் தாய் இல்லாத சூழ்நிலையில் நான் அகத்தில் அழுதேன் வெளியே காட்டிக்கொள்வதில்லை. ஆனால் நாங்கள் காத்திருந்த முதல் பிள்ளையை பெற்றெடுத்த பிறகு என் தாய் இல்லாமல் போனதை நினைத்து அழ என் தங்கைகள் என்னை தேற்றும் நிலையாகிவிட்டது. மீண்டும் நான் என் தாயை கானப்போவதில்லை, ஆனால் எங்களுள் எண்ணத்தோடு வாழும் தாய்க்கு என்றும் மரணமில்லை, அவள் வழிகாட்டுதலிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.ஒரு குடும்பத்தலைவிக்கான இலக்கனமாகவும், அர்த்தமாகவும் விலங்கியவள் 44வது வயதில் மரணமடைந்தது எங்கள் குடும்பத்திற்கு மட்டுமின்றி எங்கள் சொந்தங்கள் அனைவருக்குமே ஒரு நல்ல சினேகிதியையும், புத்திசாலியும், விடாமுயற்சியின் அடையாளமாக இருந்த ஒரு அழகுமயில் மடிந்துவிட்ட சோகம் எல்லோரையுமே மிகுதியாகவே வருத்தியது.